புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: திருத்தங்கல், 626130
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விருதுநகர்
நிலை: பங்கு
பங்குத்தந்தை அருட்பணி. அ. பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ்
குடும்பங்கள்: 400
அன்பியங்கள்: 15
அமைப்புக்கள்: 7
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 8.00 மணிக்கு நற்கருணை ஆராதனை 8.30 மணிக்கு திருப்பலி
திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மாலையில் 7.15 மணிக்கு திருப்பலி
புதன், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6.00 மணிக்கு திருப்பலி
திருவிழா: ஜூன் மாதம் 6 -ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 14-ம் தேதி வரை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ஜான் செல்வ மனோகர்
2. அருட்பணி. தி. மரிய தனராஜ், SAC
3. அருட்பணி. ஜெ. எட்வின்ராஜ்
4. அருட்பணி. சே. அந்தோனி ராஜ், FAM
1. அருட்சகோதரி. ஞானம்
2. அருட்சகோதரி. தனம்
3. அருட்சகோதரி. ரூபி ராயர்
4. அருட்சகோதரி. தெரஸ் சுசலா
5. அருட்சகோதரி. ரெஜினா
6. அருட்சகோதரி. மரிய வேளாங்கண்ணி
7. அருட்சகோதரி. ரெஜினா டேவிட் தாசன்
8. அருட்சகோதரி. உஷா சகாய ராணி
9. அருட்சகோதரி. கிறிஸ்டி எலிசபெத்
10. அருட்சகோதரி. அமல மேரி
வழித்தடம்: விருதுநகர் TO சிவகாசி வழித்தடத்தில். சிவகாசியில் இருந்து 3கி.மீ தொலைவில் திருத்தங்கல் அமைந்துள்ளது.
Location: https://maps.app.goo.gl/zfuJNKzT1V1gH1xY9
YouTube Channel: https://www.youtube.com/@St-anthonys-faith-media
Facebook: https://www.facebook.com/share/17ZVTomZPe/
Instagram: https://www.instagram.com/st._antonys_faith_media...
திருத்தங்கல் பங்கின் வரலாறு:
1953 -ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் பங்கிலிருந்து பிரிந்து, சிவகாசி தூய லூர்து அன்னை ஆலயமானது தனிப்பங்காக உருவாகியது. சிவகாசி பங்குத்தந்தையாக அருட்தந்தை. மு. அந்தோணி நாயர் அவர்கள் பணியாற்றிய காலத்தில் திருத்தங்கலில் 1969 ஆம் ஆண்டு பழைய ஆலயம் கட்டப்பட்டு, மேதகு பேராயர் P. ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது. 1982 முதல் 1988 வரை அருட்தந்தை. பீட்டர் குழந்தை அவர்கள் சிவகாசி பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், கிருஷ்ணபேரியில் உள்ள வீரமாமுனிவர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1988 முதல் 1995 வரை அருட்தந்தை S. சிப்ரியான் அவர்கள் சிவகாசி பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் தான், திருத்தங்கலில் நிர்வாகக்குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, திருவிழா போன்ற காரியங்கள் பங்குத்தந்தையோடு இணைந்து செயல்பட்டது. கல்லறைத் தோட்டமும் வாங்கப்பட்டது.
1995 - இல் அருட்தந்தை அ. அந்தோனி பாக்கியம் அவர்கள் சிவகாசி பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் திருத்தங்கலில், பீடச்சிறுவர் அமைப்பு, கத்தோலிக்க இளையோர் இயக்கம், மறைக்கல்வி, புனித வின்சென்ட் தே பவுல் சபை, மரியாயின் சேனை போன்ற திருஅவை அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பங்கின் செயல்பாடுகள் திறம்பட நடைபெற்று வந்தது. மேலும் கிருஷ்ணபேரி புனித பவுல் மாணவர் இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிறப்பாக இவரது காலத்தில் திருத்தங்கலில் புதிய ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டு, பதுவை நகர் என்ற பெயரில் மக்கள் குடியிருப்பிற்கும் வசதிகள் செய்யப்பட்டு, புதிய ஆலயத்திற்கு பேராயர் அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால், 15.08.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 03.08.2001 அன்று புதிய ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
2002 -ல் அருட்தந்தை. A. பெனடிக்ட் அம்புரோஸ் அவர்கள் சிவகாசி பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் திருத்தங்கலில் பங்குத்தந்தையின் இல்லம் கட்டப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு பின்புறத்தில் சிறிது நிலம் வாங்கப்பட்டு, ஆலயத்தை சுற்றிலும் கிறிஸ்தவ இல்லங்கள் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 19.10.2003 - ல் மணிக்கூண்டு கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பேராயர் மேதகு பீட்டர் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களின் ஆணையின் படியும் ஆசீர்வாதத்தோடும், 16.05.2004 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகாசியில் இருந்து பிரிந்து, திருத்தங்கல் புதிய பங்காக மலர்ந்தது. திருத்தங்கல் பங்கின் முதல் பங்குத் தந்தையாக அருட்தந்தை. S. பிரான்சிஸ் போர்ஜியோ அவர்கள் (16.05.2004 -12.06.2009) பொறுப்பேற்றார்கள். அவரது காலத்தில் 30.05.2006-ல் மணிக்கூண்டு திறக்கப்பட்டது. மேலும் பங்கின் அன்பியங்கள், பங்கு அருட்பணிப் பேரவை ஏற்படுத்தப்பட்டது.
2009 ஜூன் 13 -இல் 2-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. S. ஞானப்பிரகாசம் அவர்கள் (13.06.2009 - 13.06.2012) பொறுப்பேற்று, 16.01.2012 அன்று ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் மணிக்கூண்டின் அருகில் செபக்கூடம், ஆலயத்தை சுற்றி கம்பி வேலி பாதுகாப்பு போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஆலயத்திற்கு எதிர்புறம் இடம் வாங்கப்பட்டு ஆலயத்திற்கு நேர் 23 அடி அகல பாதை ஏற்படுத்தப்பட்டது.
2012 ஜூன் மாதத்தில் 3-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. D. ஞானப்பிரகாசம் அவர்கள் (14.06.2012 -02.06.2013) பணியாற்றிய காலத்தில், வாரநாட்கள் அனைத்திலும் திருப்பலி கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
2013 ஜூன் மாதத்தில் 4வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. I. பீட்டர் சகாயராஜ் அவர்கள் (03.06.2013 -24.11.2013) பணியாற்றிய காலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும், புனித அந்தோனியார் நவநாள் சிறப்பு திருப்பலி காலை 11.00 மணிக்கு கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
2013 நவம்பர் 25-இல் 5-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. B. பால்ராஜ் அவர்கள் (2013 -2018) பொறுப்பேற்றார்கள். 26.01.2014 அன்று வட்டார அதிபர் அருட்திரு. S. ஞானப்பிரகாசம் அவர்களால் கெபி மற்றும் ஆராதனை ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2015 ஏப்ரல் 15 அன்று பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 2015 ஜூன் மாதத்தில் ஆலயத்திற்குள் விவிலிய வாசிப்பு பலகை ஏற்படுத்தப்பட்டது.
2016 ஜூன் மாதம் முதல், பங்குத் திருவிழா 10 நாட்களிலிருந்து 13 நாள்களாக உயர்த்தப்பட்டு, கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. 2016 ஜூன் 7-ல் ஆலய சுகாதார வளாகம் மேதகு. அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 2018 ஜனவரி மாதம் 14ல் வட்டார அதிபர் அருட்திரு. S. ஞானப்பிரகாசம் அவர்களால் புதிய கொடிமரம் அடிக்கல் நாட்டப்பட்டு, 14.05.2018 அன்று பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2018 மே 30ல் 6-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. டேவிட் தர்மராஜ் அவர்கள் (2018-2022) பொறுப்பேற்றார்கள். 2021 முதல் ஒவ்வொரு செவ்வாய் கிழமையில் அசன விருந்து ஆரம்பித்தார், ஆலயத்தில் வர்ணம் பூசப்பட்டது, கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு பொருட்களை வழங்கினார்.
2022 மே 31-இல் 7-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. A. பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் அவர்கள் பொறுப்பேற்றார்கள். பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அசன விருந்து நடைபெற ஏற்பாடு செய்தார். மற்றும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் குணமளிக்கும் வழிபாடு ஏற்பாடு செய்தார், ஆலயத்திற்கு ஒலி ஒளி அமைப்பு சீரமைக்கப்பட்டது, தந்தையின் காலத்தில் அன்பிய அமைப்புக்கள் சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு அன்பியத்திலும் அன்பிய திருப்பலி ஏற்பாடு செய்தார்.
2023 ஜனவரி 14 அன்று செபமாலை தோட்டம் அடிக்கல் நாட்டப்பட்டடு, 2024 ஜூன் 12 அன்று பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. திருவிழா நாட்களில் நற்கருணை பவனி ஏற்பாடு செய்தார்.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் கெபியில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி மாதாவின் தேர் பவனியும் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.
St Anthony's Faith Media என்னும் Facebook, Instagram, youtube channel live மூலம் திருத்தங்கல் புனித அந்தோனியாரின் புதுமைகளை உலகம் அறியச் செய்தார்.
St Anthony's Faith Media மூலம் "பட்டாசு நகரின் பாதுகாவலரே" என்னும் முதல் பாடலை இயற்றி, திருத்தங்கல் புனித அந்தோனியாரின் புதுமைகளை பாடல் மூலம் உலகம் அறியச் செய்தார்.
புதிய ஆலயம் கட்டப்பட்ட பிறகு பழைய ஆலயம் மக்கள் பயன்படுத்தாமல் 23 ஆண்டுகள் மூடிய நிலையில் இருந்ததது, தந்தையின் பெரும் முயற்சியால் 2024 செப்டம்பர் 14ஆம் நாள் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டது. புதிய கல்லறை தோட்ட இடம் வாங்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. அரசு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வகுப்புகள் மற்றும் 10, 12 படிக்கும் மாணவர்களுக்கு ஊக்க வகுப்புகள் நடைபெறுகிறது… இவ்வாறு பங்கின் வளர்ச்சிக்கு அருட்தந்தையின் பணிகள் முக்கிய பங்காக விளங்கி வருகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் மரிய அந்தோனி ராஜ் அவர்கள்.





