1003 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், பிரண்டார்குளம்

      

புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம்: பிரண்டார்குளம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி.சவேரியார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்

குடும்பங்கள்: 100

ஞாயிறு திருப்பலி காலை 11:15 மணி

திருவிழா: ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, பத்து நாட்கள் நடைபெறும். (ஆகஸ்ட் மாதத்தில்)

வழித்தடம்: சவேரியார்புரம் -பிரண்டார்குளம் 2கி.மீ

Location map: St. Aloysius Church, Pirandarkulam

https://maps.app.goo.gl/sDKAtLtpyMbvh4jcA

வரலாறு:

பிரண்டார்குளம் என்ற ஊரானது சுமார் 200 வருடங்களுக்கு முன் இப்போதைய ஊருக்கு வடக்குப் புறத்தில் 500 மீட்டருக்கு அப்பால்தான் இருந்தது. அப்போது அங்கே உள்ள மக்கள் காலரா என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போதைய ஊர் அமைந்துள்ள இடத்தில் வீடு கட்டி குடியேறினர்.

பின்னர் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஓலையால் ஒரு ஆலயம் அமைத்து புனித ஞானப்பிரகாசியாரைத் தங்கள் பாதுகாவலராக வைத்து ஜெபம் செய்து வந்தனர். பின்பு பங்குத் தந்தையர்களின் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியால் இறை மக்களின் ஒத்துழைப்புடன், கல் கட்டிடத்தால் ஆன சிற்றாலயம் ஒன்றை 1974ஆம் ஆண்டு கட்டி முடித்தனர். அப்போது பிரண்டார்குளம், சிந்தாமணி பங்கோடு இணைந்திருந்தது.

இந்த காலகட்டத்தில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே திருப்பலி நடைபெறும். தினமும் மாலை நேரத்தில் ஜெபம் நடைபெறும். பின்னர் 1999ஆம் ஆண்டு சி.சவேரியார்புரம் தனிப்பங்காக உருவான போது பிரண்டார்குளம், சவேரியார்புரம் பங்கோடு இணைக்கப்பட்டது. பின்பு 2016 ஆம் ஆண்டு பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் அவர்களின் முயற்சியால் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, இறை மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாளன்று ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நடைபெற்று வருகிறது. மேலும் கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புப் பெருவிழா நாட்களில் சிறப்புத் திருப்பலியும் நடைபெறும்.

புனித அந்தோனியார் கெபி ஒன்றும் உள்ளது.

பங்குத்தந்தையின் தலைமையில் அருட்சகோதரிகளின் வழிகாட்டுதலில், மறைக்கல்வி வகுப்புகள் மற்றும் விடுமுறை வேதாகம வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. 

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.

ஆலய வரலாறு: பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024.

புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.