1042 தூய சகாய அன்னை ஆலயம், ஊற்றுக்குழி

   

தூய சகாய அன்னை ஆலயம்

இடம்: ஊற்றுக்குழி 

முகவரி: ஊற்றுக்குழி, மாளியாவிளை, தேங்காய்ப்பட்டணம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம், 629173

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: வேங்கோடு

மாவட்டம்: கன்னியாகுமரி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய இதய அன்னை ஆலயம், அம்சி

பங்குதந்தை அருட்பணி. ஷைன்

குடும்பங்கள்: 50

அன்பியங்கள்: 3

மாதத்தின் முதல் ஞாயிறன்று திருப்பலி

காலை 08:30 மணி.

பிற ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி காலை 10:30 மணி

திருவிழா: மே மாதம் கடைசி வாரத்தில்  மூன்று நாட்கள் 

Location map: Sahaya Matha Church OOTHUKUZHI

https://maps.app.goo.gl/ufm1W2SSdy4UhtDP7

வழித்தடம்: மார்த்தாண்டம் -புதுக்கடை -முக்காடு. முக்காட்டிலிருந்து வலதுபுறத்தில் அரை கி.மீ தொலைவில் ஊற்றுக்குழி-யில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு:

ஊற்றுக்குழி தூய சகாய மாதா ஆலயமானது சுமார் 1940-45 ஆண்டு காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இரண்டு, மூன்று குடும்பங்களுடன், 7 சென்ட் நிலத்தில் முன்னோர்களால் ஒரு ஒலைக்குடிசையில் செயல்பட்டு வந்தது. பின்னர் அம்சி பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் (1962-1971) அவர்களால் ஓடு வேயப்பட்ட ஆலயமாக உருவெடுத்தது. 

ஆரம்பத்தில் இவ்வாலயமானது வேங்கோடு, புதுக்கடை  ஆகிய பங்குகளின் கிளைபங்காக செயல்பட்டு, 1958 ஆம் ஆண்டு முதல் அம்சி பங்கின் கிளை பங்காக செயல்பட்டு வருகிறது. இங்கு வீற்றிருக்கும் தூய சகாய அன்னையை நம்பி வருவோருக்கு அருள்வளங்களையும், பொருட்செல்வங்களையும் வாரி வழங்கும் அன்னையாக திகழ்ந்து வருகிறார். அதன்பயனாக அருட்பணி. J. G. ஏசுதாஸ் அவர்களின் (1993-1999) வழிகாட்டலில் ஆலயத்திற்கு ஒரு நுழைவு வாயில் கட்டப்பட்டது. 

அருட்பணி. பால் ரிச்சர்டு ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில், புதிய ஆலயம் என்ற மக்களின்  எண்ணங்களையும், ஏக்கங்களையும் புரிந்து கொண்டு, மறைமாவட்ட உதவியோடு 05.09.2003 அன்று ஆலயத்திற்கு அடித்தளம் இடப்பட்டு, ஊற்றுக்குழி மக்களின் அயராத உழைப்பினாலும், அனைத்து மக்களின் உதவியாலும், ஊர் ஊராக சென்று ஆலய கட்டுமானப் பணிக்கான உதவியை நாடியபோது, சென்ற இடமெல்லாம் அனைத்து மக்களும் கொடுத்த நிதியுதவிகளாலும், பங்குதந்தை அருட்பணி. பால் ரிச்சர்டு ஜோசப் அவர்களின் வழிகாட்டலில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 29-04-2005 அன்று அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் அருட்பணி. பால் ரிச்சர்டு ஜோசப் அவர்களால் அனைத்து இயக்கங்களும் துவங்கப்பட்டு, குழந்தைகள், இளம் மாணவர்கள், இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வழிவகுத்தார்.

2012-ம் ஆண்டு அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்களால் ஆலயபீடம் அழகுற புதுப்பிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அருட்டணி. கில்பர்ட் லிங்சன் அவர்களின் முயற்சியால் கொடிமரம் நாட்டப்பட்டது. 2017-ம் ஆண்டு ஆலயத்தின் முன்புறம் குருசடி கட்டப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு அருட்பணி. கலிஸ்டஸ் அவர்களின் முயற்சியால் குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டது. 2022-ம் ஆண்டு அருட்பணி. காட்வின் சௌந்தர்ராஜ் அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கு அருகில் உள்ள 55 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

2024 -ம் ஆண்டு பங்குதந்தையாக அருட்பணி. ஷைன் அவர்கள் பொறுப்பேற்று, ஆலயத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்ல பணிபுரிந்து வருகிறார். அருட்பணி. ஷைன் அவர்களின் உதவியோடு, ஆலயத்திற்கு கோபுரம் கட்டும் பணி துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அன்னை ஒவ்வொரு நாளும் ஊற்றுக்குழி இறைமக்களை வளர்சிக்குள்ளாக நடத்தி வருவதால், மக்கள் ஆலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். வேண்டுவோருக்கு  அனைத்தையும் வாரிவழங்கும் அன்னையாக சகாய மாதா இருந்து வருகிறார்கள்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

பாலர் சபை

சிறுவழி இயக்கம்

இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

இளைஞர் இயக்கம்

கோல்பிங் இயக்கம்

மறைக்கல்வி

அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. ஷைன் அவர்களின் வழிகாட்டலில், பங்குப்பேரவை நிர்வாகி.