புனித ஆரோக்கிய அன்னை அன்னை ஆலயம்
இடம்: போக்குவரத்து நகர், மதுரை
மறைவட்டம்: மதுரை தெற்கு
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மாவட்டம்: மதுரை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 15
அன்பியம்: 1 (உறுதி)
மாதத்தின் நான்காவது புதன்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி
வழித்தடம்: மதுரை விமான நிலையத்திற்கு அருகில்.
Church Map location:
https://maps.app.goo.gl/4QtAJTsbGBXqZouX6
வரலாறு:
மல்லிகை மணம் வீசும் மாமதுரையின் விமான நிலையம் அருகாமையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியது P.R.C. நகர். இது இப்பொழுது போக்குவரத்து நகராக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
அமைதியின் பின்னணியில் இறைவனைச் சந்திக்கும் இடமாக திகழும் இந்த நகரில் முன்னாள் பங்குப் பணியாளர் அருட்பணி. லாரன்ஸ் கபிரியேல், SJ அவர்களால் போக்குவரத்து நகர்வாழ் கத்தோலிக்க கிறிஸ்தவர் இல்லங்களில் முதன்முதலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. சுமார் பன்னிரண்டு குடும்பங்களே இருந்தாலும், பிற சமய தோழர்களுக்கு நடுவில் நம்பிக்கைத் துடிப்போடு இயேவின் சாட்சிகளாக வாழ்ந்து வந்தனர்.
தங்களுக்கு இந்தப் பகுதியில் ஒரு ஆலயம் வேண்டும் என்று இந்த மக்களின் ஏக்கத்தையும் ஆவலையும் புரிந்து கொண்ட அருட்தந்தையின் ஆதரவோடு ஆலயம் கட்டும் எண்ணம் உருவானது. இவர்களின் உழைப்பாலும், பங்குதந்தையின் ஒத்துழைப்பாலும், முயற்சியாலும், அப்போதைய மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களின் ஆதரவாலும், சேசு சபை நிறுவனர் இஞ்ஞாசியார் திருவிழா நாளான ஜூலை 31, 2002 ஆம் ஆண்டு ஆலய நிலப்பத்திரம் பதியப்பட்டது.
சிறிய மந்தைகளாகிய போக்குவரத்து நகர் மக்களின், ஆலயம் கட்டும் பணி இரவு பகல் பாராது மேற்கொள்ளப்பட்டு, 08.09.2003 அன்று அப்போதைய மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் பெர்னாண்டோ D D.Ph.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றளவும் பங்குப் பணியாளர்களின் வழிகாட்டுதலில் ஆலயமானது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
2004 ஆம் ஆண்டு முதல், அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15ம் நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பிற சமய உள்ளங்களின் பேராதரவோடு திருக்கொடிப்பவனியும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தகவல்கள்: உதவி பங்குத்தந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: பங்கு ஆலய உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.



