புனித ஆரோக்கிய மாதா ஆலயம்
இடம்: காமராஜபுரம், மதுரை
முகவரி: புனித ஆரோக்கிய மாதா ஆலயம்
திரு வி க தெரு, காமராஜபுரம், மதுரை 625009.
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குதந்தை அருட்தந்தை. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்தந்தை. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்தந்தை. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 45
அன்பியங்கள்: 2 (எக்காளம், புகழ்ச்சி)
மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி
திருவிழா: ஆகஸ்ட் 15-ம் தேதி
வழித்தடம்:
கீழ்மதுரை ஸ்டேசன் ரோடு வழியாக சென்று, காமராஜபுரம் ஆரோக்கிய மாதா ஆலயம் செல்லலாம்.
Church Map location:
https://maps.app.goo.gl/iKfchz7kgge67KkbA?g_st=aw
வரலாறு:
1975-ம் ஆண்டு அரசு நிலமாக இருந்த நீர்நிலைக் கண்மாயை அப்போது பதவியிலிருந்த மாநில அரசு, வீடில்லா ஏழை எளிய மக்கள் வீடுகட்டி வாழ்வதற்கு என்று முரசடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அப்போது அங்கிருந்த ஏழை எளிய மக்கள், தங்களுக்குத் தேவையான இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்து, மேற்கூரை வரியாக அரசுக்குச் செலுத்தி பதிவு செய்து கொண்டார்கள்.
அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்த திரு. லூர்துசாமி அவர்கள் தனக்கென்று ஓரிடத்தைத் தேர்வு செய்வதற்கு முன், நம் ஆண்டவர் இயேசுவுக்கு, புனித ஆரோக்கிய அன்னையின் பெயரால் இந்த இடத்தைத் தேர்வு செய்து, அதைக் குருசடிக் கோவிலாக மக்கள் அனைவரும் வழிபாடு செய்ய வழிவகை செய்தார்.
பின்னர் இயற்கை சீற்றங்களால் சேதமுற்ற இந்தக் குருசடி கோவில் 1967-ம் ஆண்டு நல்லுள்ளம் கொண்ட இறைமக்களின் முயற்சியால் 60x30 என்ற நீள, அகலத்தில் ஓலைக் குடிசையமைத்து வழிபாட்டிற்காக சிறு ஆலயமாக மாற்றப்பட்டது.
இந்த நேரத்தில் சிலர், இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று மோசடி செய்ய முற்பட்டனர். எனவே நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, இந்த இடம் கிறிஸ்தவ வழிபாட்டு இடம், இதனை எவரும் உரிமை கொண்டாடக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆலயம் மீட்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டில் மீண்டும் ஆலயம், கிறிஸ்தவர்களின் வழிபாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டது. அப்போது மே மாதம் நடைபெறும் 'வணக்கம் மாதா' வழிபாட்டு நிகழ்வு மிகவும் சிறப்பைப் பெற்றது.
அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இந்த ஆலயத்திற்கு சுற்றுச்சுவர், பலிபீடம், சிமெண்டாலான நீல ஓடு (ஆஸ்பெட்டாஸ்) மேற்கூரை என்ற அடுத்த பரிமாணத்திற்கு உயர்த்தப்பட்டு, 1986-ம் ஆண்டு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு கஸ்மீர் ஞானாதிக்கம் D.D.S.T.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதன்பிறகு மாதத்தில் முதல் புதன்கிழமை திருப்பலியும், மற்ற நாட்களில் செபமாலையும், வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெற்றது.
அன்னையின் ஆசீரோடும் நல்மனம் கொண்ட நன்கொடையாளர்களின் பொருளாதார உதவியோடும், இறைமக்களின் தாராள உழைப்போடும், பங்குத்தந்தை அருட்பணி. R. ஆரோக்கிய ராஜ், சே.ச அவர்கள் வழிகாட்டுதலோடும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 2017 ஆகஸ்டு 15 ஆம் நாள் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி D.D.STD. அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, புதுப்பொலிவோடு உயர்ந்து நிற்கிறது தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்.
ஆலய வரலாறு: உதவி பங்குத்தந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்
புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பு: பேராலய உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.





