இடம்: செபஸ்தியார்புரம், மதுரை
முகவரி: புனித செபஸ்தியார் ஆலயம், சிந்தாமணி ரோடு, செபஸ்தியார் புரம், மதுரை,
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
மாதத்தின் முதல் வியாழன் மாலை 07:00 மணிக்கு திருப்பலி
குடும்பங்கள்: 42
அன்பியங்கள்: 2 (அன்பு, தேவ அன்பு)
திருவிழா: பிப்ரவரி மாதத்தில்
வழித்தடம்:
திருத்தலப் பேராலயத்திலிருந்து, பழையகுயவர்பாளையம் சிந்தாமணி ரோடு ரெயில்வே கேட் கடந்து செல்லும் வழியில் ஆலயம் அமைந்துள்ளது.
Church Map location:
https://maps.app.goo.gl/5sabiyLRUbHFGB3v9
வரலாறு:
செபஸ்தியார்புரம் இறைமக்கள், காலரா, டைஃபாய்டு போன்ற பிணிகளால் பாதிக்கப்பட்ட போது, புனித செபஸ்தியாரின் உதவியைநாடி நோய் நீங்கப் பெற்றனர். இதன் விளைவாக புனிதருக்கு குருசடி எழுப்ப ஆவல் கொண்டனர். மேலும் அன்றைய இறைமக்கள் செங்கல் செய்வதை தங்களின் தொழிலாகக் கொண்டிருந்தனர். எனவே தாங்கள் செய்த செங்கல்லின் மூன்றில் ஒரு பங்கை குருசடி எழுப்ப சேர்த்து வைத்து, மண் சுவர்களை உருவாக்கி, குடிசைக் கோயிலாக 1958 ஆம் ஆண்டு உருவாக்கினர்.
அருட்பணியாளர் விக்டர், சே.ச (1986-1991) அவர்களின் வழிகாட்டுதலால், மக்கள் அனைவரும் இணைந்து குலுக்கல் சீட்டு நடத்தி, அதன்மூலம் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, குருசடிசையை மாற்றி ஓடுகளால் அலங்கரித்தனர்.
2013 ஆம் ஆண்டு அருட்பணியாளர் P.S. அருள், சே.ச அவர்களின் உதவியால், குருசடியின் பக்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு உதவியாக புதிய ஆலயம் ஒன்றை எழுப்பி விரிவுபடுத்தப்பட்டது. இதனை மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள் அர்ச்சிப்பு செய்து வைத்தார்.
2015-2016 ஆம் ஆண்டு அருட்பணியாளர் ஆரோக்கியராஜ், சே.ச அவர்களின் உதவியால் ஆலயத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது.
வியாகுல அன்னை திருத்தலப் பேராலய இயேசு சபை குழுமத்தின் உதவியால், பங்கு இணைப்பணியாளரின் வழிகாட்டுதலால் இங்கு மாலைநேரக் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள ஏழை மாணவச் செல்வங்கள் பயின்று வருகிறார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை புனிதரின் வழியாக இறையருளை அனைவரும் பெறும் வகையில், வருடந்தோறும் புனிதரின் திருவிழாவை பிப்ரவரி மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இளைஞர் மன்றம், இறைமக்கள், அன்பிய பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலால், கொடியேற்றி, தேர்ப்பவனி நடத்தி திருவிழாவை சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.
தகவல்கள்: உதவி பங்குத்தந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.


