புனித சந்தியாகப்பர் ஆலயம்
இடம்: மேல மெஞ்ஞானபுரம், குணராமநல்லூர் அஞ்சல், 627814
மாவட்டம்: தென்காசி
மறைமாவட்டம்: பாளையங்கோட்டை
மறைவட்டம்: தென்காசி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. தூய பாத்திமா மாதா ஆலயம், புளிச்சிகுளம்
2. கிறிஸ்து அரசர் ஆலயம், மடத்தூர்
பங்குத்தந்தை அருட்பணி. S. அல்போன்ஸ்
அன்பியங்கள்: 6
1) புனித யோசேப்பு அன்பியம்
2) புனித அன்னை தெரசா
3) புனித சவேரியார்
4) புனித மோசே
5) புனித லூக்கா
6 ) புனித ஆரோக்கிய அன்னை.
பங்கின் குடும்பங்கள்:
பங்கில்: 176
புளிச்சிகுளம்: 14
மடத்தூர்: 48
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:45 மணி
ஞாயிறு காலை 10:30 மணி திருப்பலி (மடத்தூர்)
சனி மாலை 07:00 மணி திருப்பலி (புளிச்சிகுளம்)
வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி அல்லது மாலை 07:00 மணி
திருவிழா: ஜூலை மாதம் 25-ம் தேதியை அடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ஜோசப் சேவியர் (late)
2. அருட்பணி. சந்தியாகு
3. அருட்சகோதரி. லூக்காஸ் மேரி, CIC (late)
4. அருட்சகோதரி. சேசுவின் ஃப்ளோரினா, CIC
5. அருட்சகோதரி. லீமா ரோஸ், CIC
6. அருட்சகோதரர். விஜித் அந்தோணி, OFM
வழித்தடம்: திருநெல்வேலி -தென்காசி -பாவூர்சத்திரம் -மேல மெஞ்ஞானபுரம்
Church Map location: ST. JAMES CHURCH
https://maps.app.goo.gl/DJ7CU5u4CUdMdDP29
பங்கு வரலாறு:
மேலமெஞ்ஞானபுரம் கிராமம் 2012 ஆம் ஆண்டு வரை, தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பங்கின் கிளை பங்காக செயல்பட்டு வந்தது. அந்நாட்களில் மக்களின் வழிபாட்டிற்காக ஊரின் மேற்குப் பகுதியில், ஓடு வேய்ந்த சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பின்னர், அருள்தந்தை T. A. பெர்க்மான்ஸ் அவர்கள் தென்காசி பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், தென்காசி –திருநெல்வேலி நெடுஞ்சாலைக்கு அருகில் நிலம் வாங்கப்பட்டு, புதிய ஆலயம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்புதிய ஆலயம் 20 டிசம்பர் 1989 அன்று மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பழைய ஆலயம் இருந்த இடத்தில் தூய ஆரோக்கிய அன்னை கெபி அமைக்கப்பட்டது. தவக்கால சிலுவைப் பாதை, குருத்து ஞாயிறு போன்ற நிகழ்வுகளில் இந்தக் கெபியிலிருந்து பவனி ஆரம்பமாகி, ஆலயத்தில் வந்தடையும்.
மக்கள் தூரத்திலிருந்தே இறைவனை தரிசிக்கவும், ஆலய மணி ஒலி ஊரெங்கும் கேட்கவும் அழகிய வடிவமைப்பில் 85 அடி உயர கோபுரம் மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டது. இந்த கோபுரம் 24 ஜூலை 2005 அன்று மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்த இந்த சமூகம் 12 ஜூன் 2012 அன்று தென்காசி பங்கிலிருந்து பிரிந்து தனி பங்காக உயர்ந்தது.
ஆலயத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அருள்திரு. லூர்துராஜ் அவர்களின் முயற்சியால் ஆலய முகப்பில் வெள்ளி விழா நுழைவுவாயில் கட்டப்பட்டது. இந்த நுழைவுவாயில் மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு, 21.12.2014 அன்று வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கில் இயங்கும் நிறுவனங்கள்:
ஆர்.சி. தொடக்கப் பள்ளி, புளிச்சிகுளம்
தூய தோமா துறவு சபை கன்னியர் இல்லம், மேலமெஞ்ஞானபுரம்
ஆரோக்கிய அன்னை நலவாழ்வு மையம் (மருந்தகம்)
புதுமை விளங்கும் அன்னாம்மாள் குருசடி:
ஊரின் மேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், தென்காசி நெடுஞ்சாலையோரத்தில் புகழ்பெற்ற அன்னாம்மாள் குருசடி அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களால் மிகுந்த பக்தியுடன் வழிபடப்படும் இந்த புனிதத் தலம் பலரின் நம்பிக்கையின் மையமாக திகழ்கிறது. மக்கள் தங்கள் வேண்டுதல்களை வைத்து ஜெபித்து, நிறைவேறிய பின் நன்றி செலுத்த வருகை தருகின்றனர்.
உடல் நலக்குறைவு, குழந்தைப்பேறு இல்லாமை மற்றும் பல்வேறு வாழ்க்கைச் சிரமங்களில் உள்ளோர் இங்கு வந்து ஜெபித்து, ஆறுதல் மற்றும் அருள் பெற்றதாக சாட்சி அளிக்கின்றனர். குழந்தைப்பேறு வேண்டி வந்தவர்கள் ஆசீர்வாதம் பெற்று திரும்புகின்றனர் என்றும் பலர் நம்பிக்கை பகிர்கின்றனர். பெற்ற அருளுக்கு நன்றியாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடுவது இத்தலத்தின் சிறப்பான பக்தி மரபாக தொடர்கிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
மரியாயின் சேனை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
அருட்தந்தை ஜோசப் சேவியர் கத்தோலிக்க நற்பணி மன்றம்
புனித சந்தியாகப்பர் நற்பணி மன்றம்
பாலர் சபை
அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை
இளைஞர் இயக்கம்
பீடச்சிறார் இயக்கம்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1.அருள்திரு. அலோய்சியஸ் துரைராஜ் (2012-2013)
2.அருள்திரு. S.A. அன்னசாமி (2013-2014)
3.அருள்திரு. I. லூர்துராஜ் (2014- 2017)
4.அருள்திரு. G. குழந்தை ராஜ் (2017-2020)
5.அருள்திரு. E. சுரேஷ் (2020-2021)
6.அருள்திரு. அமிர்த ராஜா சுந்தர் (2021-2024)
7.அருள்திரு. சூ. அல்போன்ஸ் (2024…..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. சூ. அல்போன்ஸ் அவர்கள்.











