புனித வின்சென்ட் பல்லோட்டியார் ஆலயம்
இடம்: வலியஏலா, பேச்சிப்பாறை, 629161
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: புத்தன்கடை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், பேச்சிப்பாறை
பங்குதந்தை அருட்பணி. ஆல்பர்ட் லீனஸ், SAC
குடும்பங்கள்: 22
அன்பியங்கள்: 2
ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணி
திருவிழா: ஜனவரி மாதத்தில் 22-ம் தேதி வருகிற வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை
வழித்தடம்: பேச்சிப்பாறை -கோதையாறு வழித்தடத்தில், பேச்சிப்பாறையிலிருந்து 3கி.மீ தொலைவில், (சீரோ பாயின்ட்டைத் தொடர்ந்து) வலியஏலா அமைந்துள்ளது.
Church Map location: R.C CHURCH, VALIYALA.
https://maps.app.goo.gl/pnhSSzrxuKv9aKFZ8
வரலாறு:
இயற்கை அன்னையின் இனிய அழகின் மறுவுருவாய், கோதையாற்றின் நீரினை
தாங்கிடும் பேச்சிப்பாறை நீர்தேக்கத்தின் ஓரத்தில், தேக்கு மரங்களின் இடையில், தருவை புற்களின் வாசங்களில், எழிலாய் விளங்கும் புனித வின்சென்ட் பல்லோட்டியார் ஆலயம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கடையால் பேரூராட்சியில் வலியஏலா கிராமத்தில் அழகுற அமைந்திருக்கிறது. இவ்வாலயப்பகுதி முழுவதும், இராணுவத்தில் ஓவ்வுபெற்ற படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, செம்பு பட்டா வழங்கி குடியமர்த்தப்பட்ட பகுதியாகும்.
ஆலய உருவாக்கம்:
இந்தப் பகுதியில் 4 கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்த காரணத்தால், பேச்சிப்பாறை பங்கின் நிர்வாகிகள், குலசேகரம் பங்குதந்தை அருட்பணி. சூசையன், SAC அவர்களிடம் பலமுறை எடுத்துச் சொன்னதன் விளைவாக, 1984-ம் ஆண்டில் வலிய ஏலாவில் இடம் வாங்கி ஓலையால் வேயப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு, மாதத்தில் 2 நாட்கள் திருப்பலி வழங்கப்பட்டது.
புனிதரின் பெயரிடல்:
திறம்பட மறைபரப்பு பணி செய்துவரும் புனித வின்சென்ட் பல்லோட்டியார் சபைக் குருக்களின் (SAC) நினைவாக, இவ்வாலயத்திற்கு புனித வின்சென்ட் பல்லோட்டியார் ஆலயம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஆலய தோற்றம்:
கிறிஸ்தவ குடும்பங்களின் வருகை அதிகரித்ததால், அருட்பணி. சூசையன், SAC அவர்களின் பணிக்காலத்தில் ஆஸ்பெற்றாஸ் கூரையுடன் கூடிய பாலர் பள்ளி அமைக்கப்பட்டு, 26-12-1986 அன்று திறப்புவிழா நடத்தப்பட்டது. இந்த கட்டிடமானது ஆலயமாகவும் செயல்பட்டு வந்தது.
1998 ஆம் ஆண்டு பேச்சிப்பாறை தனிப் பங்காக மாறிய பின்பு ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு திருப்பலி வழங்கப்பட்டது. மக்களின் ஒத்துழைப்பாலும், பல்லோட்டைன் சபையின் நிதி உதவியாலும், அருட்பணி. சத்தியநேசன், SAC அவர்களின் வழிகாட்டலில், பக்கவாக்கில் இருந்த ஆஸ்பெற்றாஸ் ஆலயத்தை, சாலை பகுதியை பார்த்து கோபுரம் இருக்கும் வகையில் திட்டமிட்டு, கான்கிரீட் தள ஆலயத்தைக் கட்டி, மேதகு ஆயர். லியோன் அ. தர்மராஜ் அவர்கள் தலைமையில் 03-02-1999 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. மோசஸ் சவரிமுத்து, SAC அவர்களால் குருசடி கட்டி திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. அன்பியங்களின் ஒருங்கிணையம்
3. மறைக்கல்வி
4. பாடகற்குழு
5. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
பேச்சிப்பாறை பங்கு சமூகத்தலிருந்து மரியாயின் சேனையினர், அருட்பணிப் பேரவையினர் மற்றும் பாடகற்குழுவினர் சென்று திருப்பலி நடத்த உதவி செய்தும், பிறரன்பு சகோதரிகளில் ஒருவர் பொறுப்பேற்று மறைக்கல்வி இங்குள்ள ஆசிரியர்களை வைத்தே நடத்தியும் உதவி புரிந்தனர். மின்சாரம் இல்லாத, ஆபத்தான இப்பகுதியில் சிறப்பாக இவ்வாலயம் செயல்பட காரணம் புனித வின்சென்ட் பல்லோட்டியார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வரலாறு: பேச்சிப்பாறை பங்கின் வெள்ளிவிழா மலர். மற்றும் குலசேகரம் ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2024.
புகைப்படங்கள்: பேச்சிப்பாறை பங்கின் முன்னாள் துணைத் தலைவர் திரு. ஜஸ்டின் ராஜ் அவர்கள்.


