கிறிஸ்து அரசர் ஆலயம்
இடம்: கோதையாறு, 629151
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: புத்தன்கடை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், பேச்சிப்பாறை
பங்குதந்தை அருட்பணி. ஆல்பர்ட் லீனஸ், SAC
குடும்பங்கள்: 18
அன்பியங்கள்: 2
புனித சவேரியார் அன்பியம்
வேளாங்கண்ணி மாதா அன்பியம்
ஞாயிறு திருப்பலி காலை 11:00 மணி
திருவிழா: நவம்பர் 23 -ம் தேதி
வழித்தடம்: மார்த்தாண்டம் -குலசேகரம் -பேச்சிப்பாறை -கோதையாறு
மார்த்தாண்டம் -அருமனை -களியல் -சீரோபாயின்ட் -கோதையாறு
பேச்சிப்பாறை -கோதையாறு 15கி.மீ
பேருந்துகள்: 89J, 332, 89M
Christ The King Church Kodayar
https://maps.app.goo.gl/t9jc8ntHNqbrRRsT8
வரலாறு:
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலே, மேகங்களின் தொடர் பயணத்திலே, வனவிலங்குளின் வனப்பிலே, நீரோடைகளின் குளிர்ச்சியிலே, வனத்தின் வனப்பிலே என இயற்கை எழில் கொஞ்சும் கோதையாறு வனப்பகுதியில்,
மின்வாரிய ஊழியர்களுக்கு என்று அமைக்கப்பட்ட ஆலயம். இன்று மின்வாரிய ஊழியர்கள் மற்றும் கொடுத்துறை மலைவாழ் குடியிருப்பு மற்றும் கோதையார் மார்க்கெட் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலய வரலாற்றைக் காண்போம்.....
குலசேகரத்தில் இருந்து புனித அகுஸ்தீன் சபை (ICM) அருட்சகோதரிகள் 1917 ஆம் ஆண்டு முதல் பேச்சிப்பாறை, வலிய ஏலா, ஆலம்பாறை, கோதையாறு, குற்றியார், சிலோன் காலனி, சிற்றாறு பகுதிகளுக்கு நற்செய்திப் பணியாற்றி வந்தனர். குறிப்பாக கூனித் தாயார் என்றழைக்கப்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்சகோதரி எமின் அவர்கள் தோட்டமலை, தச்சமலை, கிளவியாறு வழியாக நடந்தும், கொடுத்துறை மலைவாழ் மக்கள் இல்லங்களில் தங்கியும் நற்செய்திப் பணி செய்ததன் விளைவு தான் கோதையாறு ஆலயம் உருவாகக் காரணமாக அமைந்தது.
அவரைத் தொடர்ந்து மற்றும் பல அருட்சகோதரிகளும் இங்கு இறைப்பணியாற்றிச் சென்றனர்.
பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் கட்டிமுடித்த 1906-ம் ஆண்டு, வெளிநாட்டினர் தங்கும் இடமாக வெள்ளச்சித்தோடு என்னும் பகுதி இருந்தது.
இப்பகுதியில் மின்உற்பத்தி செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததை, அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிக்காலத்தில் கட்ட முடிவு செய்து, திட்டமிடலுடன் பணிகள் பூர்த்தி ஆனது.
மின்வாரியத்தில் பணிபுரிந்த கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தேவைக்காக, குலசேகரம் பங்குதந்தை அருட்பணி. லாசர் அவர்களால் அரசு அனுமதி பெற்று, கோதையாற்றில் உள்ள அரசு பள்ளி வராந்தாவில் 1963-ம் ஆண்டு முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
1966 ஆம் ஆண்டு குலசேகரம் பங்குதந்தை அருட்பணி. சார்லஸ் பெரோமியோ அவர்களால் அரசின் அனுமதி பெற்று, பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டு, ஓலைக்குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது.
1971 -ம் ஆண்டு குலசேகரம் பங்குதந்தை அருட்பணி. வென்சஸ்லாஸ் அவர்களின் முயற்சியால் தற்போது காணப்படும் ஆலயமானது கட்டப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டது.
1983-ம் ஆண்டு முதல் குலசேகரம் பங்கானது பல்லோட்டியன் சபை (SAC) குருக்களின் பொறுப்பின் கீழ் வந்தது. (குலசேகரம் பங்கின் கிளைப்பங்காக இருந்த பேச்சிப்பாறை பங்கின் மேடையில் தங்கியிருந்து, கோதையாறு பங்கில் திருப்பலிக்கு அருட்பணியாளர் செல்வது வழக்கம்).
18.11.1998 அன்று குலசேகரம் பங்கிலிருந்து பிரிந்து, பேச்சிப்பாறை தனிப்பங்காக ஆனது. இதுமுதல் கோதையாறு ஆலயம், பேச்சிப்பாறை பங்கின் கிளைப் பங்காக மாற்றம் பெற்றது. இதுமுதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது வருகிறது.
தகவல்கள்: ஆலய நிர்வாகி திரு. பெட்லின் அவர்கள்.
ஆலய வரலாறு: பேச்சிப்பாறை பங்கின் வெள்ளிவிழா மலர் மற்றும் குலசேகரம் பங்கு ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2024.
புகைப்படங்கள்: மாதாபுரம் புனித காணிக்கை மாதா ஆலய இளையோர்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: பேச்சிப்பாறை பங்கின் முன்னாள் துணைத் தலைவர் திரு. ஜஸ்டின் ராஜ் அவர்கள்.


