புனித வனத்து அந்தோணியார் திருத்தலம்
இடம்: பில்லாவடந்தை, மேமாத்தூர் அஞ்சல், செம்பனார் கோயில், 609309
மறைமாவட்டம்: தஞ்சாவூர்
மறைவட்டம் : மயிலாடுதுறை
மாவட்டம் : மயிலாடுதுறை
பங்குத்தந்தை அருட்திரு. E. சாலமன்
தொடர்புகொள்ள: +91 97863 61593
குடும்பங்கள்: 950 (கிளைப்பங்குகள் சேர்த்து)
நிலை: பங்குத்தளம் (திருத்தலம்)
கிளைப்பங்குகள்:
1. கடலி
2. கண்டியங்கடலி
3. திருவிளையாட்டம்
4. கீழ்க்கரை
5. வேலம் புதுக்குடி
6. கொடைவளாகம்
7. அரங்கக்குடி
8. கீழ்மாத்தூர்
9. பொட்டாவரம்
10. பட்டாவரம்
11. நெடுவாசல்
12. புடையூர்
13. ஈச்சங்குடி
14. காசான்தட்டை
15. சிறு கடம்பனூர்
16. நல்லுச்சேரி
17. கூடலூர்
18. எரவாஞ்சேரி
19. இலுப்பூர்
20. நல்லாடை
21. செம்பனார் கோயில்
22. ஆக்கூர்
23. அரும்பாக்கம்
24. நெய்வாசல்
25. கடக்கம்
26. பெரம்பூர்
27. மேமாத்தூர்
28. மகாராஜபுரம்
29. கீழவல்லம்
30. வதிஷ்ட்டாசேரி
31. அரசூர்
32. கலசம்பாடி
33. குமாரமங்களம்
34. பனங்குடி
35. பரசலூர்
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 08:30 மணி ஜெபமாலை, காலை 09:00 மணி திருப்பலி
மாதத்தின் முதல் ஞாயிறு காலை 08:30 மணியிலிருந்து 09:30 மணி வரை குணமளிக்கும் நற்கருணை ஆசீர், திருப்பலி, திருஎண்ணெய் பூசுதலும் நடைபெறும்
நாள்தோறும் காலை 07:00 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி புனித அருளானந்தர் நவநாள் ஜெபம் திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய் & முதல் சனி மாலை 06:00 மணி: கடலி புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி நடைபெறும்
மற்ற நாட்களில் வாரம்தோறும் கிளை கிராமங்களில் மாலை 06:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
பங்கு திருவிழா:
பெரிய வியாழக்கிழமையிலிருந்து 21 ஆம் ஆம் நாள் கொடியேற்றம், ஒன்பதாம் நாள் தேர் திருவிழா, பத்தாம் நாள் திருவிழா.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Sr. ஜெனட்
2. Sr. அமலா
வழித்தடம்: மயிலாடுதுறை -காரைக்கால் வழித்தடத்தில், செம்பனார் கோயில் -நல்லாத்தூர் -நல்லாடை -பில்லாவடந்தை.
இரயில் வழித்தடம்: மயிலாடுதுறை.
Church Map location: St. Antony's Church, Pillavadanthai 099441 31332
https://maps.app.goo.gl/jCPMKQ5LKFzk7qE58
வரலாறு:
வரலாற்றுச் சிறப்பும் வல்லமையும் நிறைந்த, செம்மண் புனிதர் எனப் போற்றப்படும், புனித அருளானந்தர் தடம் பதித்து பணி செய்த புண்ணிய பூமி பில்லாவடந்தை பங்கு திருத்தலமாகும்.
கிபி. 1681 இல் பில்லாவடந்தை பங்கு உருவானது. அதன் முதல் பங்குத்தந்தை புனித அருளானந்தர் ஆவார்.
இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை தஞ்சை மன்னரிடமிருந்து புனித அருளானந்தர் பெற்றுள்ளார் என்பது வரலாற்று உண்மையாகும்.
சிறு கடம்பனூர் ஆளுநராய் இருந்த பொன்னமரத்தானும், நீலவேரியிருந்து இராம நாயக்கரும் கிறிஸ்துவ மக்களுக்கு இடுக்கண் நினைத்தபோது, புனித அருளானந்தர் தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜிக்கு இதை தெரிவித்துள்ளார். ஆளுநர்களும் ஒடுக்கப்பட்டு, பில்லாவடந்தை, நீலவேரி, சிறுகடம்பனூர் மக்களுக்கு மன்னர் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
1795 இல் அருள்திரு. சவேரியர் சுவாமி பங்குத்தத்தையாக பணி செய்த போது, 60*10* அளவுள்ள கோவில் கட்டியுள்ளார். இவர் 1820 இல் இறந்தபோது, இக்கோவில் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1839 இல் பில்லாவடந்தை பாண்டிச்சேரி மிஷனில் இணைக்கப்பட்டது. புதுவை ஆயர். மேதகு பொன்னான்ட் அவர்கள், அப்பாவு சாமி என்று அழைக்கபட்ட அருள்திரு. லாசர் அவர்களை பங்குத்தந்தையாக நியமித்தார்.
தற்பொழுது உள்ள ஆலயம் 1845 இல் அருள்திரு. சவுரிநாதன் சுவாமிகளால் கட்டப்பட்டுள்ளது.
1847 இல் பில்லாவடந்தை பெரிதாக இருந்ததால் கும்பகோணத்திலிருந்து தனி பங்காக பிரிக்கப்பட்டது. பின்பு பில்லாவந்தையுடன் ஆத்துக்குடி, மயிலாடுதுறை, எருக்கூர் இணைக்கப்பட்டன.
1760 முதல் 1838 வரை கோவா குருக்களும், 1839 முதல் பாண்டிச்சேரி மிஷன் பொறுப்பிலும், 1899 முதல் கும்பகோணம் மறைமாவட்டமும், பின்னர், 07.08.1929 இல் மயிலாப்பூர் மறை மாவட்டத்துடன் பில்லாவடந்தை இணைக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் இருந்து பிரிக்கப்பட்டு, 13.11.1952 இல் தஞ்சாவூர் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது, பில்லாவடந்தை பங்கு தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.
06.08.1974 அன்று முதல் கன்னியர் இல்லம் இங்கு தொடங்கப்பட்டது.
140 ஆண்டுகளாக முற்றுப்பெறாத ஆலய கோபுரப்பணியானது, அருட்திரு. பு. சி. மிக்கேல் அவர்களால் கட்டப்பட்டு 1976 ஆம் ஆண்டில் மந்திரிக்கப்பட்டது.
அருட்திரு. பு. சி. மிக்கேல் பணிக்காலத்தில் பீடம், மொசைக் தரை ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு, ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு 28.04.1977 அன்று மேதகு R. A. சுந்தரம் D.D.L.C.L., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போது பங்குதந்தை அருட்பணி. E. சாலமன் அவர்களின் முயற்சியால் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, 11.05.2025 அன்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு T. சகாயராஜ் D.D.Ph.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் பணிபுரியும் அருள்சகோதரிகள் சபை:
1. F.J.S அருட் சகோதரிகள்.
2. கொன்சாகா அருட் சகோதரிகள்
பங்கின் கல்வி நிறுவனம்:
St. Antony's Primary School
விடுதி:
St.Don Bosco Home
பில்லாவடந்தைப் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
முதல் பங்குதந்தை புனித அருளானந்தர்.
(1760-1795 வரை கோவா குருக்கள் பணியாற்றினர். அவர்களது பெயர் பட்டியல் கிடைக்கப்பெறவில்லை)
1. Fr. சவேரியார் (1796-1800)
2. Fr. ஞானப்பிரகாசியார் (1801-1805)
3. Fr. பெர்னாட் (1806-1810)
4. Fr. லாமே (1811-1815)
5. Fr. அப்பாவுசாமி (1816-1819)
6. Fr. சுவாமிநாதர் (1820-1823)
7. Fr. நாசரேத் (1824-1826)
8. Fr. ராயன் (1827-1829)
9. Fr. ப்ளாந்ரோ சில்வா (1830-1835)
10. Fr. லாமே (1836-1838)
11. Fr. லாசர் (1839-1842)
12. Fr. குழந்தைசாமி (1843-1844)
13. Fr. சவரிநாதன் (1845-1847)
14. Fr. A. லூயிஸ் (1848-1857)
15. Fr. ப்ளாந்ரோ சில்வா (1858-1860)
16. Fr. லாசர் (1861-1862)
17. Fr. பெலிக்ஸ் (1863-1865)
18. Fr. சூசை (1866-1867)
19. Fr. சுவாமிநாதர் (1868-1870)
20. Fr. பெல்தோல்டி (1871-1875)
21. Fr. A. லூயிஸ் (1876-1886)
22. Fr. A. தாமஸ் (1887-1888)
23. Fr. ஆரோக்கியநாதர் (1889-1892)
24. Fr. குழந்தைசாமி (1893-1894)
25. Fr. A. சுலுச்சேரே (1895-1896)
26. Fr. நாசரேத் (1897-1898)
கும்பகோணம் மறைமாவடத்தின் கீழ் பில்லாவடந்தை பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்: (1899-1902)
27. Fr. A. H. திகோன் (1902-1903)
28. Fr. A. நாகோன் (1903 -நவ1903)
29. Fr. M. I. அவ்லி (டிச1903 -மே1904)
30. Fr. T. டெலிபிரிஜ் (ஜூன் 1904 -நவ1904)
31. Fr. A. H. திகோன் (டிச1904 -ஏப்1905)
32. Fr. ஜரி அக்கியூஸ் (மே1905 -நவ1909)
33. Fr. ஏகான் மார்ட்டின் (நவ1909 -பிப்1910)
34. Fr. G. ஞானீர் (பிப்1910 -மே1910)
35. Fr. கனிஷ்மான் (ஜூன் 1910 -நவ1912)
36. Fr. B. ஜெய்லி தாஸ் (நவ1912 -மே1914)
37. Fr. மரிய ஆரோக்கிய ராஜ் (ஜூன் 1914 -ஜூலை1914)
38. Fr. A. S. லூர்து (ஜன1915 -மே1916)
39. Fr. மரிய ஆரோக்கிய ராஜ் (ஜூன் 1916 -ஆக1916)
40. Fr. M. I. அவ்லி (செப்1916 -1917)
41. Fr. L. அந்தோணி (டிச1917 -ஏப்1918)
42. Fr. மரிய ஆரோக்கிய ராஜ் (மே1918 -ஏப்1919)
43. Fr. அந்தோணி (ஏப்1919 -மே1919)
44. Fr. M. I. அவ்லி (ஜூன்1919 -நவ1919)
45. Fr. டெல்டோர் (டிச1919 -ஜூன்1920)
46. Fr. பெர்கோடி (ஜூலை1920 -ஜூலை1924)
47. Fr. X. மெக்கேல் (ஜூலை1924 -ஜன1926)
48. Fr. நொரேனா (பிப்1926 -மே1929)
49. Fr. மரிய லூயிஸ் (ஜூன்1929 -ஏப்1930)
50. Fr. C. நாசரேத் (மே1930 -ஜன1932)
51. Fr. A. S. ராயன் (பிப்1932 -பிப்1934)
52. Fr. A. குழந்தைசாமி (மார்1934 -ஜூன்1934)
53. Fr. B. T. ஜோசப் (ஜூலை1934 -ஆக1934)
54. Fr. A. குழந்தைசாமி (செப்1934 -ஏப்1936)
55. Fr. L. சில்வர் (ஏப்1936 -நவ1936)
56. Fr. G. மெனசஸ் (டிச1936 -ஜன1941)
பில்லாவடந்தை பங்கில் பணியாற்றிய தஞ்சை மறைமாவட்ட குருக்கள் : (1952 இல் தஞ்சை மறைமாவட்டம் உருவாகும் முன்னரே 1941 முதல் தஞ்சையை சேர்ந்த குருக்கள் இங்கு பணியாற்றினர்.)
57. Fr. K. G. அமலம் (பிப்1941)
58. Fr. G. மெனசல் (பிப்1941 -டிச1944)
59. Fr. B. F. நெரோனா (ஜன1945 -ஜூன்1947)
60. Fr. P. T. ஜோசப் (ஜூலை1947 -ஜூன்1952)
61. Fr. D. அந்தோணிசாமி (ஜூன்1952 -அக்1959)
62. Fr. A. டிகோஸ்டா (நவ1959 -மே1963)
63. Fr. A. பெல்லாரோ (மே1963 -அக்1966)
64. Fr. D. ஆரோக்கியசாமி (நவ1966 -மே1970)
65. Fr. Y. லியோ மைக்கேல் (ஜூன்1970 -ஜூலை1973)
66. Fr. P. C. மைக்கேல் (ஜூலை1973 -ஜூன்1980)
67. Fr. A. லூர்துசாமி (ஜூலை1980 -ஜூலை1981)
68. Fr. A. சேவியர் (ஆக1981 -ஜூன்1986)
69. Fr. A. ஜான் அருளானந்து (ஜூலை1986 -ஜூன்1992)
70. Fr. S. செலஸ்டின் (ஜூலை1992 -ஜூன்1997)
71. Fr. M. அருள் (ஜூலை1997 -மே1999)
72. Fr. A. வின்சென்ட் தேவராஜ் (ஜூன்1999 -மே2004)
73. Fr. K. M. ஆரோக்கியசாமி (ஜூன்2004 -ஜூன்2006)
74. Fr. D. ஆரோக்கிய தாஸ் (ஜூன்2006 -நவ2008)
75. Fr. சூசை அருள் (பொறுப்பு) (நவ2008 -மே2009)
76. Fr. A. பல்தசார் (ஜூன்2009 -ஜூன்2016)
77. Fr. M. அந்தோணி தாஸ் (ஜூன்2016 -நவ2020)
78. Fr. E. சாலமன் (நவ2020.....
புனித அருளானந்தரால் கட்டப்பட்டு, 345 ஆண்டுகளைக் கடந்து, ஓங்கி உயர்ந்து நிற்கும் இறையருள் நிரப்பப் பெற்ற, பில்லாவடந்தை ஆலயத்திற்கு வாருங்கள்.... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. E. சாலமன் அவர்கள்.






