புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: கானூர், ஆர்.சி. தெரு, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, கடலூர், 608701
மறைவட்டம்: பாளையங்கோட்டை
மறைமாவட்டம்: தஞ்சாவூர்
மாவட்டம்: கடலூர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. வலசக்காடு
2. சேல்விழி
3. பேரூர்
4. தேத்தாம்பட்டு
5. சாத்தாவட்டம்
6. கூடலையாத்தூர்
7. காவாலக்குடி
பங்குத்தந்தை அருட்பணி. S. ஜோ கிளமெண்ட்
Mob: +91 97867 67303
குடும்பங்கள்: 224 (கிளைப்பங்குகள் சேர்த்து 436)
அன்பியங்கள்: 16 (கிளைப் பங்குகள் சேர்த்து)
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 08:00 மணி செபமாலை, திருப்பலி
திங்கள், புதன், வியாழன், சனி காலை 06:30 மணி திருப்பலி
செவ்வாய், வெள்ளி மாலை 06:30 மணி திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 05:30 மணி புனித அந்தோனியார் நவநாள், நற்கருணை வழிபாடு, திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05:30 மணி செபமாலை, திருமணி ஆராதனை, திருப்பலி
திருவிழா: ஜூன் 13-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. திருத்தொண்டர். கராசியாலோ, HGN
2. அருட்சகோதரி. நிர்மலா, அன்னாள் சபை
3. அருட்சகோதரி. ஜெயஸ்ரீ, காணிக்கை அன்னை சபை.
வழித்தடம்: சேத்தியாத்தோப்பு -திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) வழி கானூர்.
Church Map location: St. Antony's Church, kanur
https://maps.app.goo.gl/ApCLmMuaH1wRgkoMA
வரலாறு:
பாளையங்கோட்டை பங்கின் கீழ் செயல்பட்டு வந்த கானூர் என்னும் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயமானது கட்டப்பட்டு, 12.06.1992 அன்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு P. ஆரோக்கிய சாமி D.D.MSc,BT., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
ஆலயமணி நிறுவப்பட்டு, மணி மண்டபமும் கட்டப்பட்டு 13.06.1993 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மற்றும் தண்டேஸ்வரநல்லூர் பங்கின் எல்லைக்குள் உள்ள கத்தோலிக்க மக்களின் அருள் நலவாழ்வை மனதில் கொண்டு, இறையருளால் தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு த. சகாயராஜ் DD.,Ph.D., அவர்களின் ஆணையின்படி, பாளையங்கோட்டை மற்றும் தண்டேஸ்வரநல்லூர் பங்கின் எல்லைக்குட்பட்ட சில கத்தோலிக்க கிராமங்கள் பிரிக்கப்பட்டு கானூர், புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பங்காக 13.06.2025 அன்று உருவானது.
கானூர், வலசக்காடு, சேல்விழி ஆகிய மூன்று கிராமங்கள் பாளையங்கோட்டை பங்கிலிருந்தும்; பேரூர், கூடலையாத்தூர், தேத்தாம்பட்டு, சாத்தாவட்டம் மற்றும் காவாலக்குடி ஆகிய ஐந்து கிராமங்கள் தண்டேஸ்வரநல்லூர் பங்கிலிருந்தும் பிரிக்கப்பட்டு, இப்புதிய பங்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட கிராமங்களில் வாழும் ஏறத்தாழ 1,540 கத்தோலிக்க மக்கள் இப்புதுப்பங்கின் உறுப்பினர்கள் ஆவர். வடக்கே கூடலையாத்தூர் மற்றும் காவலக்குடி, தெற்கே சாத்தாவட்டம், கிழக்கே வலசக்காடு மற்றும் பேரூர், மேற்கே தேத்தாம்பட்டு ஆகியவை நாற்புற எல்லைகளாக விளங்குகின்றன.
பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. S. ஜோ கிளமெண்ட் அவர்கள் பணிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, கானூர் இறைசமூகத்தை ஆன்மீகப் பாதையில் சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.
திரு. S. ஆரோக்கிய சாமி செபஸ்தியான், கானூர் பங்கு மக்கள், தஞ்சை மறைமாவட்டம் ஆகியவற்றின் உதவியில் பங்குதந்தை அருட்பணி. S. ஜோ கிளமெண்ட் அவர்களின் வழிகாட்டலில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, 28.09.2025 அன்று மேதகு ஆயர் த. சகாயராஜ் DD.,Ph.D., அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை
2. பெண்கள் பணிக்குழு
3. புனித அந்தோனியார் இளையோர் இயக்கம்
4. அன்பியங்கள்
5. புனித டோமினிக் சாவியோ பீடச் சிறுவர், சிறுமியர்
6. புனித செசிலியம்மாள் பாடகர்குழு
7. புனித கார்லோ ஆக்யூட்டஸ் அமைப்பு
பங்கின் கல்வி நிறுவனம் மற்றும் அருட்சகோதரிகள் இல்லம்:
ஆர்.சி தொடக்கப்பள்ளி
காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகள் இல்லம்.
கோடி அற்புதங்கள் புரிகிற கானூர் புனித அந்தோனியார் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. S. ஜோ கிளமெண்ட் அவர்கள்.





