புனித அந்தோணியார் அருள்தலம்
இடம்: சங்ககிரி - 637301
மாவட்டம்: சேலம்
மறைமாவட்டம்: சேலம்
மறைவட்டம்: திருச்செங்கோடு
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சூசையப்பர் ஆலயம், ICL
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், சின்னாக்கவுண்டனூர்
3. புனித அமலோற்பவ அன்னை ஆலயம், வளைய செட்டிப்பாளையம்
4. புனித பெரியநாயகி அன்னை ஆலயம், சத்யா நகர்
பங்குத்தந்தை: அருள்பணி. K. கார்மேல் கிருபாகரன்
குடும்பங்கள்: 227
அன்பியங்கள்: 13
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி
வாரநாட்களில் (செவ்வாய் தவிர) : காலை 06.00 மணிக்கு திருப்பலி
செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை ஒருநாள் தியானம்
மாதத்தின் முதல் செவ்வாய் : காலை 11.00 மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை
மாதத்தின் நான்காம் வெள்ளி : முழு இரவு செபவழிபாடு
பங்குத்திருவிழா : ஜூன் 13-ம் தேதி
பங்கின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. இயேசுநாதர், OFM Cap.
2. திருத்தொண்டர். M. ஜோசப் பீட்டர், சேலம் மறைமாவட்டம்
3. அருள்சகோதரி. கிரீடா, FIHM
4. அருள்சகோதரி. பெரியநாயகி, FSPM
வழித்தடம் : சேலத்திலிருந்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் 40 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து பழைய எடப்பாடி சாலையில் அருள்தலம் அமைந்துள்ளது.
Church Map location:
https://maps.app.goo.gl/dPe3id8NGC5ydaFJ7?g_st=aw
ஆலய வரலாறு :
சங்ககிரி என்ற பெயருக்கு ஒரு அர்த்தம் உண்டு. கிரி என்பது மலையைக் குறிக்கிறது. சங்கு போன்ற மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊர் சங்ககிரி எனப் பெயர் பெற்றது.
கி.பி.1655 ஆம் ஆண்டில் அருள்பணி. புருஎன்சா அவர்கள், எடப்பாடி வெள்ளாண்டிவலசையில் ஆலயம் கட்டினார். அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு, குறிப்பாக சங்ககிரி, சேலம் பகுதியில் மறைபரப்புப் பணியாற்றினார். கி.பி.1679 ஆம் ஆண்டில் இடைப்பாடி என்ற அணைக்கரைப்பாளையம் பங்குத் தலைமை இடமாகவும், சங்ககிரி அதில் ஒரு சிறு கிளைப்பங்காகவும் இருந்தது. இப்பகுதியில் மதுரை வேத போதகர்கள் பணியாற்றியபோதும், கி.பி.1794 ஆம் ஆண்டில் மைசூர் வேத போதகச் சபையின் பொறுப்பில் இருந்தபோதும், ஆயர் மேதகு சம்பனுவா சங்ககிரிக்கு வருகைதந்து பார்வையிட்டு, பங்கு விசாரணை நடத்தியுள்ளார். கி.பி.1795 ஆம் ஆண்டில் சிப்பாய்கள் சங்ககிரியில் கோவில் கட்டினர். கி.பி.1935 முதல் கி.பி.1940 வரை அருள்பணி. ரெகோட்டியர் அவர்களின் பணிக்காலத்தில் ஏற்கனவே இருந்த பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய ஆலயமாக கட்டப்பட்டது.
இடைப்பாடி (எடப்பாடி) பங்கின் கிளைப்பங்காக இருந்து, புனித அந்தோணியாரைப் பாதுகாவலராகக் கொண்டு விளங்கி வந்த சங்ககிரி ஆலயம், 1975 ஆம் ஆண்டில் தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. 12.06.1986 அன்று குருக்களின் இல்லம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான கல்லறை நிலம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நிலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன் அந்த கல்லறையில் சாமிக்கண்ணு என்ற காவல்துறை ஆய்வாளர் புதைக்கப்பட்ட கல்வெட்டு அங்கே இருந்தது. அருள்பணி. M. அல்போன்ஸ் (1994-2001) அவர்களும், ஊர்ப்பெரியவர்களும் சேர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று, கல்லறை வழக்கில் வெற்றி பெற்றனர். அந்த நிலத்தில் திருஇருதய ஆண்டவர் சுரூபம் நிறுவப்பட்டு கல்லறைக்குச் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, 26.03.1996 அன்று திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும், பங்கு ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அருள்பணி. M. அல்போன்ஸ் (1994-2001) அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 17.12.2000 அன்று புதிய ஆலயம் கட்டுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இடம் பாறையாக இருந்ததால், 288 துளைகள் பாறைகளில் துளைக்கப்பட்டு கான்கீரீட் தூண்கள் அமைத்து ஆலயமானது கட்டப்பட்டு, 15.05.2001 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. A. ஜான் அல்போன்ஸ் (2002-2008) அவர்களின் சிறப்பு முயற்சியால் பொதுமக்களுக்கென சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டு 21.10.2004 அன்று திறந்துவைக்கப்பட்டது. மேலும், இவரது முயற்சியில் சத்யா நகரில் ஏழைகளுக்கு பெல்ஜியம் மாணவர்களால் 10 வீடுகள் கட்டித்தரப்பட்டது.
அருள்பணி. S. ஆரோக்கியசாமி (2008-2013) அவர்களின் பணிக்காலத்தில் புனித அந்தோணியாரின் 13 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, 10.06.2012 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், படிக்கட்டுகள் நடுவில் நீரூற்றும், உலகின் ஒளி வானவர் சுரூபமும் நிறுவப்பட்டு, 25.12.2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. S. பெஞ்சமின் சந்தனராஜ் (2013-2018) அவர்களின் பணிக்காலத்தில் புதிய புனித அந்தோணியார் கொடி மரத்தூண் நிறுவப்பட்டு, 13.06.2017 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. A. சகாயராஜ் (2018-2022) அவர்களின் முயற்சியால் புனித அந்தோணியார் சமுதாயக்கூடம் புதுப்பிக்கப்பட்டு, 18.08.2019 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய பங்குத்தந்தை அருள்பணி. K. கார்மேல் கிருபாகரன் அவர்களின் முயற்சியால் பங்கில் அருங்கொடை பணிக்குழு தொடங்கப்பட்டு, மக்களை பல்வேறு ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க செய்து வருகின்றார். இளையோர்களை ஒன்றிணைத்து KEYBOARD வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இன்றைய தேவைகளில் பெரும் பங்கு வகிக்கும் சிமெண்ட், இங்கிருக்கும் இந்தியா சிமெண்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் சிலர் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்கள்.
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. பங்கு நிதிக்குழு
3. வின்சென்ட் தே பவுல் சபை
4. பாடற்குழு
5. அருங்கொடை இளையோர் செபக்குழு
6. பீடச்சிறுவர்கள் குழு
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருள்பணி. குருசுங்கல் குரியாகோஸ் (1975-1978)
2. அருள்பணி. A. பீட்டர் பிரான்சிஸ் (1978-1981)
3. அருள்பணி. K. S. பயஸ் (1981-1983)
4. அருள்பணி. S. சவரிமுத்து (1983-1987)
5. அருள்பணி. I. செல்வரத்தினம் (1987-1989)
6. அருள்பணி. S. ஹென்றி ஜார்ஜ் (1989-1992)
7. அருள்பணி. S. அமல்ராஜ் (1992-1993)
8. அருள்பணி. C. S. அந்தோணிசாமி (1993-1994)
9. அருள்பணி. M. அல்போன்ஸ் (1994-2001)
10. அருள்பணி. A. இருதயநாதன் (2001-2002)
11. அருள்பணி. A. ஜான் அல்போன்ஸ் (2002-2008)
12. அருள்பணி. S. ஆரோக்கியசாமி (2008-2013)
13. அருள்பணி. S. பெஞ்சமின் சந்தனராஜ் (2013-2018)
14. அருள்பணி. A. சகாயராஜ் (2018-2022)
15. அருள்பணி. K. கார்மேல் கிருபாகரன் (2022- தற்போது வரை...)
தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. K. கார்மேல் கிருபாகரன் அவர்கள்.
புகைப்படங்கள்: திருத்தொண்டர் அருளானந்தம் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: சகோதரர். ஜான் பீட்டர், சேலம் மறைமாவட்டம்.







