புனித சவேரியார் ஆலயம்
இடம்: சவேரியார் சாவடி, கீழ் மதுரை ஸ்டேசன் ரோடு, மதுரை 625009
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 80
அன்பியங்கள்: 3 (இறையன்பு, அடைக்கலம், உன்னதம்)
மாதத்தின் மூன்றாவது வியாழன் மாலை 07:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்
திருவிழா: நவம்பர் 24-ம் தேதி முதல் டிசம்பர் 03-ம் தேதி வரை
வழித்தடம்:
திருத்தல பேராலயத்திலிருந்து பழைய குயவர் பாளையம் சாலை செல்லும் வழியில், கீழ்மதுரை சாலை தொடங்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.
Church Map location:
https://maps.app.goo.gl/qXK3HDmUF2nQihTs9
வரலாறு:
கடற்கரை மாவட்டங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முன்னோர்கள், மதுரையில் கிழக்குப் பகுதியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். வாழ்விடத்தில் சிறிய ஆலயம் கட்ட நினைத்து புனிதர் சவேரியார் குருசடி (சாவடி) எனப்பெயர் வழங்கியும், தங்களின் பிற்காலத் தேவைகளுக்காக வியாபாரத்தில் எடுத்து வைத்த சிறிய இலாபத் தொகை மற்றும் கமிஷன் வருவாய் மூலமாக, சாவடி பெயரில் சிறு சிறு இடங்களாக வாங்கி பாதுகாத்து வந்துள்ளார்கள். மூல ஆவணங்களின்படி இவ்வரலாறு 1885 தொடங்கி 1925 வரை நிகழ்வாகக் கருதலாம்.
சீமை ஓடுகள் வேயப்பட்டு இரு பகுதிகளாக திண்ணையுடன் இருந்த சாவடி ஆலயம் மாற்றப்பட்டு, நீண்டச் செவ்வக வடிவில் தரைதள ஆலயமும், மாடியில் மக்கள் செல்லும் பகுதியாகவும், 1996 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
2007-2013 வரையிலான காலகட்டத்தில் சவேரியார் சாவடி இறைமக்களின் தாராள நன்கொடையில், இரு அடுக்குகளைக் கொண்ட சமுதாயக் கூடமானது கட்டப்பட்டு 08.09.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறாக சவேரியர் சாவடி, 140 ஆண்டுகால பாரம்பரியமிக்க (1885-2025) ஆலயமாகத் திகழ்கிறது.
தகவல்கள்: திருத்தலப் பேராலய உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.



