1045 புனித காணிக்கை அன்னை ஆலயம், வாலீஸ்பேட்டை

      

புனித காணிக்கை அன்னை ஆலயம்

இடம்: வாலீஸ்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, ராமாபுரம் அஞ்சல், கடலூர், 608901

மாவட்டம்: கடலூர்

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஆக்னஸ் அன்னை ஆலயம், கொளத்தங்குறிச்சி

2. புனித காணிக்கை மாதா ஆலயம் (மகிழ்ச்சி மாதா), தண்டக்காரன்குப்பம்

3. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கோல்பிங் நகர் (செங்கால்)

பங்குத்தந்தை அருட்பணி. K. விக்டர் அலெக்ஸ்

தொடர்பு எண்: +91 96299 26688

குடும்பங்கள்: 302 (கிளைப்பங்குகள் சேர்த்து 498)

அன்பியங்கள்: 9 (கிளைப்பங்குகள் சேர்த்து 14)

திருவழிபாட்டு நேரங்கள்:

தினமும் காலை 06:30 மணிக்கு ஜெபமாலை தொடர்ந்து திருப்பலி 

ஞாயிறு காலை 06:30 மணிக்கு திருப்பலி 

தண்டக்காரன்குப்பம்

 ஞாயிறு காலை 08:30 மணிக்கு வாலிஸ்பேட்டை பங்கு ஆலயத்தில் திருப்பலி 

ஞாயிறு மாலை 07:00 மணிக்கு கொளத்தங்குறிச்சியில் திருப்பலி

மாதத்தின் முதல் புதன் மாலை 06:30 மணிக்கு கோல்பிங் நகரில் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் சனி மாலை 06:30 மணிக்கு ஜெபமாலை, தேர் பவனி மற்றும் திருப்பலி

திருவிழா: நவம்பர் 21-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. Iruthyasamy, Thanjavur Diocese (Kolathankurichi)

2. Fr. Arockia Raj, SH (Valispet)

3. Fr. Anthuvan, Rosarian (Valispet)

4. Bro. Velankkani Ravi, SHJ (Valispet)

5. Sr. Jackulin Mary, SSHJ (Valispet)

6. Sr. Arul Prakasa Mary, Salesian (Valispet)

7. Sr. Santhi, SSHJ (Valispet)

8. Sr. Stella Mary, SSHJ (Valispet)

9. Sr. Amali, SSJV (Valispet)

10. Sr. Aanatha Barathi, SSHJ (Valispet)

11. Sr. Sugantha Priya, SSHJ (Thandakarankuppam)

12. Sr. Angel Mary, SSHJ (Thandakarankuppam)

13. Sr. Jeya Chitra, SSHJ (Thandakarankuppam)

14. Sr. Viyagula Mary, Servite (Thandakarankuppam)

15. Sr. Jashmine  Pastina, SSHJ (Valispet)

16. Sr. Recksalin, DMI (Valispet)

17. Sr. Thanishya, Bethalmite (Valispet)

18. Sr. Benitta Mary, SSHJ (Valispet)

19. Sr. Kavitha (Kolathankurichi)

20. Sr. Suriya Prabha, SHF (Valispet)

21. Sr. Alphonse (Valispet)

22. Sr. Susaimary (Valispet)

23. Bro. Willson, Thanjavur (Valispet)

24. Sr. Nisha (Valispet)

வழித்தடம்: தஞ்சாவூர் -விக்கிரவாண்டி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோழதரம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து பாளையங்கோட்டை -வாலீஸ்பேட்டை

பாளையங்கோட்டை 6கி.மீ

சோழதரம் 12கி.மீ

மாமங்கலம் 11கி.மீ

ஆண்டிமடம் மற்றும் வரதராசன்பேட்டை வழியாகவும் வரலாம்.

Church Map location: Our Lady of Presentation Church, Valispet

https://maps.app.goo.gl/Nuky9qQzijMcnMYS9

வரலாறு:

கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாலீஸ்பேட்டையில் ஒரு ஆலயம் கட்டப்பட்டு, மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் சிலுவை வடிவில் இரண்டாவது ஆலயமானது 1985-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாளையங்கோட்டை பங்கின் ஒரு அங்கமாக இருந்த வாலீஸ்பேட்டை கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு கொளத்தங்குறிச்சி, தண்டக்காரன்குப்பம், கோல்பிங் நகர் (செங்கால்) ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய புதிய பங்கானது, 01.06.1986 அன்று தஞ்சை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு ஆரோக்கியசாமி சுந்தரம் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

புதிய ஆலயம் கட்டும் பணியினை அருட்தந்தை சுரேஷ் ஆனந்த ஜெயராஜ் அவர்கள் பணிக்காலத்தில் 02.07.2019 அன்று மேதகு ஆயர் எம் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருள்தந்தை த. கபரியேல் ஸ்டீபன் அவர்களின் அயராத உழைப்பால், மக்களின் தாராள பங்களிப்போடு புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 20.11.2021 அன்று புதிய ஆலயம் மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பள்ளிக்கூடம்:

1936-ல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளைக் கொண்டு புனித மரியன்னை தொடக்கப்பள்ளி அரசு ஆணை பெற்று நடத்தப்பட்டது. 1972ல் இப்பள்ளியானது 6 முதல் 8 வகுப்புகள் உள்ளடக்கிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு அங்கீகாரம் பெறப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளாக இப்பள்ளியானது, இப்பகுதி மாணாக்கர்களின் அறிவு கண்களைத் திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறது. 

அருட்சகோதரிகள்:

பங்கில் இயேசுவின் திருஇருதய சபையை சார்ந்த அருட்சகோதரிகள் ஆன்மீகம், ஆசிரியர் மற்றும் மருத்துவ பணிசெய்து வருகிறார்கள்.  அருட்சகோதரிகள் பங்கின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு உதவி செய்கிறார்கள். பங்கின் அன்பிய கூட்டங்களை மக்களே நடத்துவதற்கு உதவுகின்றார்கள். பங்கு தளத்தில் ஞாயிறு மறைக்கல்வி கற்பிக்கிறார்கள். பக்த சபைகளுக்கு வழிகாட்டுகிறார்கள். தினந்தோறும் காலை திருப்பலிக்கு முன் ஜெபமாலை பாடல்கள் பாடுதல் போன்ற பணிகளை பலிபீட சிறுவர் சிறுமியர் கற்றுக் கொள்ளும் வகையில் பணி செய்து வருகிறார்கள்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

வி ஆர் கார்லோஸ் இயக்கம் 

பீடச் சிறார்கள்

பாடகர் குழுவினர் இளையோர் இயக்கம்

பாலர் சபை

மறைக்கல்வி

பங்கில் உள்ள கெபிகள்:

புனித காணிக்கை மாதா கெபி

திருச்சிலுவை கெபி

புனித கார்லோ அக்கிட்டஸ் கெபி

புனித அந்தோனியார் கெபி

புனித ஆக்னஸ் அன்னை கெபி

புனித ஆரோக்கிய மாதா கெபி

புனித வனத்து சின்னப்பர் கெபி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1.Rev. Fr. M.L. Charles (1986-1990)

2.Rev. Fr. Rio Charles (1990-1994)

3.Rev. Fr. Ulaganathan (1994-1995)

4.Rev. Fr. M. Xavier (1995-1997)

5.Rev. Fr. K. Jesuraj (1997-2003)

6.Rev. Fr. Maria Joseph Gerald (2003-2006)

7.Rev. Fr. A. John Britto (2006-2008)

8.Rev. Fr. A. Peter Damian (2008-2009)

9.Rev. Fr. J. Albert Selvaraj (2009-2010)

10.Rev. Fr. S. Amul William (2010-2014)

11.Rev. Fr. A. Antony (2014-2017) 

12.Rev. Fr. A. Suresh Ananda Jeyaraj (2017-2020)

13.Rev. Fr. S. Gaberial Stephen (2020-2025)

14.Rev. Fr. K. Victor Alex (2025...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. K. விக்டர் அலெக்ஸ் அவர்கள்.