புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்
இடம்: கொசவபட்டி, 624304
மாவட்டம்: திண்டுக்கல்
மறைமாவட்டம்: திண்டுக்கல்
மறைவட்டம்: கொசவபட்டி
நிலை: பங்குத்தளம் (மறைவட்ட தலைமை ஆலயம்)
கிளைப்பங்குகள்:
1. புனித வனத்து அந்தோணியார் ஆலயம், வேலாம்பட்டி
2. புனித பாத்திமா அன்னை ஆலயம், புங்கம்பாடி
3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சாணார்பட்டி
4. புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு
5. புனித சவேரியார் ஆலயம், பழையத்தெரு
பங்குத்தந்தை அருட்பணி. S. அகஸ்டின் ஜேக்கப் (கொசவபட்டி மறைவட்ட அதிபர்)
குடும்பங்கள்: 1500+
அன்பியங்கள்: 17
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி மற்றும் காலை 08:00 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 05:15 மணி
புதன் மாலை 07:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி
திருவிழா: ஜூன் மாதம் 21 ஆம் தேதி வருகிற வாரத்தின் சனி, ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்பணியாளர்கள்:
1. Fr. Pappuraj, SJ (late)
2. Fr. Xavier Dhanaraj, DGL (late)
3. Fr. Peter Raj, SJ
4. Fr. Rajendran SJ
5. Fr. Paul Michael, SJ
6. Fr. Arul Joe, SJ
7. Fr. Amalanathan, SJ
8. Fr. Andrew, SDB
9. Fr. Abraham, SDB
10. Fr. Solomon, OMI
11. Fr. Gnanapragasam, Holycross
12. Fr. Jeyaseelan, OCD
13. Fr. James Selvanathan, Trichy
14. Fr. Arul Jeyaseelan, DGL
15. Fr. Albert Joseph, DGL
16. Fr. Lawrence Sahayaraj, DGL
17. Fr. Pradeep, Chennai
18. Fr. Mariadass, MSC
19. Fr. Paulraj, MSC
20. Fr. Jesu Arockiam, MSC
21. Fr. Selvam, Ofm Cap
22. Fr. James Anbunathan, Ofm Cap
23. Fr. Paul Raj, Ofm Cap
24. Fr. Mark Stephen, Ofm Cap
25. Fr. Alphonse, Delhi
26. Fr. Justin, Italy
27. Fr. Britto, MMI
28. Fr. Justin Diraviam, DGL
29. Fr. Jasper, DGL
30. Fr. James Peter, Holy Cross
31. Fr. Arulanantham, SDB
32. Fr. Arockiasamy, SJ, Delhi
Brothers:
1. Bro. Pangiraj, SHC
2. Bro. Antony Sahayaraj, SHC
3. Bro. Gnanapragasam, SHC
4. Bro. Santiago, Thelasal
5. Bro. Antonydass, Thelasal
6. Bro. Amal Raj, MNTF
7. Bro. Britto, MNTF
8. Bro. Edward, MNTF
9. Bro. Christy, MNTF
10. Bro. Benjamin, MNTF
11. Bro. Jeyaraj
Sisters:
1.Sr. John Louis, CIC (late)
2.Sr. Gnanasoundari, CIC
3.Sr. Leema, CIC
4.Sr. Uthiriam, CIC
5.Sr. Rosali, CIC
6.Sr. Therese, CIC
7.Sr. Selvi, CIC
8.Sr. Reeta, CIC
9.Sr. Visuvasam, CIC
10.Sr. Kulandai Therese, PRESN
11.Sr. Jecintha, PRESEN
12.Sr. Jenifer, PRESEN
13.Sr. Concilia, PRESN
14.Sr. Felix, OSM
15.Sr. Jacquline, OSM
16.Sr. Victoria, OSM
17.Sr. Vinnarasi, OSM
18.Sr. Carolin, OSM
19.Sr. Stella, OSM
20.Sr. Kulandai
21.Sr. Vasanthi, SAT
22.Sr. Michael, SAT
23.Sr. Salomi, SAT
24.Sr. Nesam, SAT
25.Sr. Amali, SAT
26.Sr. Gunaselvi, SAT
27.Sr. Belsi, ICM
28.Sr. Sahayam, ICM
29.Sr. Jeyamary
30.Sr. Fathima, ICM
31.Sr. Sahaya Mary, Rome
32.Sr. Josphin Susila, OSM
33.Sr. Vimala Jeni Priya, OSM
வழித்தடம்: திண்டுக்கல் -இரண்டலப்பாறை -நல்லமநாயக்கன்பட்டி -நொச்சியோடைப்பட்டி -தவசிமடை -கொசவபட்டி
திண்டுக்கல் -கொசவபட்டி 15கி.மீ
Church Map location: St. Aloysius Gonzaga Parish Church
https://maps.app.goo.gl/88WoZwbXfk2bLxGY9
வரலாறு:
கொசவபட்டியில் பண்டைய தொழிலான மண்பாண்டம் செய்து வந்த குயவர்களே வாழ்ந்து வந்தனார். இவ்வாறு வாழ்ந்து வந்த குயவர்கள் 'கொசவர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். இந்த கொசவர்கள் வாழ்ந்து வந்த இருப்பிடத்தை காலப்போக்கில் கிராமங்களை குறிப்பிடும் அடைமொழியான "பட்டி" என்ற சொல் சேர்க்கப்பட்டு 'கொசவபட்டி' என்று அழைக்கப்படுகின்றது.
கொசவபட்டிக்கு தெற்கே சிறுமலையிலிருந்து நீர் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விவசாயத் தொழில் செய்து வாழ்ந்து வந்த மக்கள், கிறிஸ்துவ விசுவாசத்திலும், பக்தியிலும் பிணைக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். 1908-ம் ஆண்டு திரு. லூயிஸ் கேத்தரின், திருமதி. லூயிஸ் மரி குடும்பத்தினர் ஆலயம் கட்டுவதற்கு நிதி உதவி செய்தார்கள். அவர்கள் தங்களின் பாதுகாவலரான புனித ஞானப்பிரகாசியார் என்ற புனிதரின் பெயரை இந்த ஆலயத்திற்கு பாதுகாவலராக வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று 1909-ம் ஆண்டு அருட்தந்தை சூசைநாதன் அடிகளார் இந்த ஆலயத்தை புனித ஞானப்பிரகாசியார் பெயரில் கட்டினார்.
பண்டார வீடு குடும்பம் இ. சூசை அவர்கள், ஆலய கட்டுமானப் பணிக்காக 1908 ஆம் ஆண்டு, ரூ. ஆயிரம் வழங்கினார். அதன் நினைவாக அவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பலி இன்றுவரைக்கும் ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
கி.பி. 1909-ம் ஆண்டு பங்கு ஆலயம் தொடங்கப்பட்டாலும், ஒரு வரைவான ஆலயம் இல்லாத காரணத்தினால் இறைமக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு 1912-ம் ஆண்டு, அருட்தந்தை. சூசைநாதன் அவர்கள் புனித ஞானப்பிரகாசியார் பெயரில் பெரிய ஆலயமாக கட்டி எழுப்பினார்.
புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் வருவதற்கு முன்பே, மக்கள் கல்வியில் மேம்பட்டு வளர புனித சூசையப்பர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி என்ற பெயரில் 1890-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உதயமானது. 1981, ஜூன் 4-ம் நாள் இந்தப் பள்ளியானது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பங்கு ஆலயத்தின் முதல் பங்குத் தந்தையாகவும் அருட்தந்தை. சூசைநாதன் அடிகளார் இருந்துள்ளார். அப்போது இந்தப் பங்கில் சுமார் 72 குடும்பங்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களாக இருந்துள்ளார்கள். கடவுள் பல அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை இப்பங்கிலிருந்து உருவாக்கியிருக்கிறார். கொசவபட்டி பங்கு திண்டுக்கல் மறைமாவட்டத்திற்கு முகவரியாகவும், பெருமை சேர்க்கும் பங்காகவும் வளர்ந்து வருகிறது.
திண்டுக்கல் மறைமாவட்ட இரண்டாவது ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள், பங்குத்தந்தையாக முதன் முதலாக பணியாற்றியது (1980-1985) கொசவபட்டி பங்கில் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி. K. A. ஆரோக்கிய சாமி பணிக்காலத்தில் 2002 ஆம் ஆண்டு ஆலயமானது புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. M. A. ஆண்டனி பணிக்காலத்தில் 2023-24 காலகட்டத்தில் ஆலய முன்மண்டப நுழைவாயில் கட்டப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
புனித வின்சென்ட் தே பவுல் சபை
அன்பியம்
கத்தோலிக்க சங்கம்
பங்கின் கல்வி நிறுவனங்கள்:
ஆர்.சி. ஆரம்பப் பள்ளி (ஆண்கள்)
ஆர்.சி. கான்வென்ட் நடுநிலைப் பள்ளி (பெண்கள்)
புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி
குழந்தை இயேசு மழலையர் பள்ளி
கொசவபட்டி ஞானப்பிரகாசியார் மறைவட்ட பங்குகள்:
1. கொசவபட்டி
2. நத்தம்
3. புகையிலைப்பட்டி
4. தவசிமடை
5. நல்லமநாயக்கன் பட்டி
6. மங்கமனூத்து
7. கோம்பையம்பட்டி
8. வேம்பார்பட்டி
9. நொச்சியோடைப்பட்டி
10. செந்துறை
11. கொட்டாம்பட்டி
12. இரண்டலப் பாறை
13. வடகாட்டுப்பட்டி
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. S. அகஸ்டின் ஜேக்கப் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பு மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர்.
மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்கள்: மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜஸ்டின் திரவியம் அவர்கள்.





