புனித லூர்து அன்னை ஆலயம்
இடம்: தண்டராம்பட்டு
மாவட்டம்: திருவண்ணாமலை
மறைமாவட்டம்: வேலூர்
மறைவட்டம்: திருவண்ணாமலை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. லூர்துநகர்
2. வணக்கம்பாடி
3. தரடாப்பட்டு
4. மேல்கரிப்பூர்
5. கொழுந்தம்பட்டு
6. சாத்தனூர்
7. மல்லிகாபுரம்
8. வீரணம்
பங்குத்தந்தை அருட்பணி. M. பாக்கியராஜ்
குடும்பங்கள்: 134 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 9 (கிளைப்பங்குகள் சேர்த்து)
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
செவ்வாய் திருப்பலி மாலை 06:30 மணி
வாரநாட்களில் மாலையில் கிளைப்பங்குகளில் திருப்பலி நடைபெறும்
திருவிழா: பிப்ரவரி மாதம் 11-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. லூக்காஸ், OFM Cap (கொழுந்தம்பட்டு)
வழித்தடம்: திருவண்ணாமலை -தானிப்பாடி சாலையில், 15கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Church Map location: LOURDU MATHA CHURCH
https://maps.app.goo.gl/6dxQXaJBHMCFGQRZ9
வரலாறு:
மறைப்பரப்பு பணியாளரான அருள்தந்தை K.P. குரியன் அடிகளார் தானிப்பாடி பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1985 ஆம் ஆண்டில் மல்லிகாபுரம் ஊரில் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. பின்னர் 1987இல் தண்டராம்பட்டில் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, தண்டராம்பட்டுவை கிளைப்பங்காக மாற்றி, 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் புனித லூர்து அன்னை ஆலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் மைக்கேல் அகஸ்டின் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பின்னர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, 19.06.2004 அன்று அருள்தந்தை ஜான் வளர்காட் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். இவரைத் தொடர்ந்து அருள்பணி. D. அமல்ராஜ், P. ஞானசேகர், ஆகியோர் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்கள். பிறகு அருள்பணி. A. ஜெயசீலன் பங்குத்தந்தையாக பனியாற்றிய போது இவ்வாலயம் 2022-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
அருள்பணி M. பாக்கியராஜ் அவர்கள், ஐந்தாவது பங்குத்தந்தையாக 29.06.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆலயத்தின் முன்புறம் புனித லூர்து அன்னை கெபி புதிதாக கட்டப்பட்டு 14.12.2025 அன்று வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு P. அம்புரோஸ் D.D அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அருட்சகோதரிகளின் அளப்பரிய பணி:
ஆராதனை சபையைச் சார்ந்த 2 கன்னியர் இல்லங்கள் தண்டராம்பட்டிலும், மல்லிகாபுரத்திலும் உள்ளன.
2005 -ஆம் ஆண்டு கார்மெல் சபையின் தமிழ் மறை மாநிலம் தங்களுக்கான துறவற இடத்தை வாங்கி, 2008 -வது ஆண்டு வைகறை தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி துறவற வாழ்வை ஆரம்பித்தார்கள். இவர்கள் தொழிற்பயிற்சி, பல்வேறுபட்ட சமூக நலப்பணிகள் மற்றும் ஆன்மீகப் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு துறவிகளுக்கான புதிய குடியிருப்பை கட்டிமுடித்தனர். தற்போது மாலை நேரப்பயிற்சி வகுப்பு, பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சிப் பணிகள், மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றப் பணிகள் ஆகியவற்றை திறன்பட மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வைகறை அறுசுவை மசாலா என்ற உணவுத் தொழிற்சாலையை மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக செயல்படுத்தி வருகின்றனர்.
பங்கில் உள்ள கெபிகள்:
லூர்து மாதா கெபி
புனித அந்தோனியார் கெபி.
இவ்வாறாக பங்குத்தந்தையின் வழிகாட்டலிலும் நற்செய்திப் பணிகளாலும், அருட்சகோதரிகளின் பிறர்நலப் பணிகளின் வாயிலாகவும், லூர்து அன்னையின் அரவணைப்பிலும், இறைவனினின் ஆசியுடன் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது தண்டராம்பட்டு இறைசமூகம்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. பாக்கியராஜ் அவர்கள்.






