1040 புனித அந்தோனியார் ஆலயம், சூசையப்பர் புரம் -மதுரை

     

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: சூசையப்பர் புரம், மதுரை, 625009

மாவட்டம்: மதுரை

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: மதுரை தெற்கு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை

குடும்பங்கள்: 100

அன்பியங்கள்: 4 (இரட்சிப்பு, உடன்படிக்கை, துணிவு, விடுதலை)

அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ

உதவி பங்குத்தந்தையர்

அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ

அருட்பணி. பெனிட்டோ, SJ

மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி 

திருவிழா:

ஜூன் 20 -ம் தேதி ஆரம்பித்து ஜூலை முதல் வாரத்தில் முடியும் வகையில் 13 நாட்கள் திருவிழா நடைபெறும்

வழித்தடம் : 

திருத்தலப் பேராலயத்திலிருந்து பழையகுயவர்பாளையம் சிந்தாமணி ரோடு  ரெயில்வே கேட் கடந்து, அனுப்பானடி ஹவுசிங் போர்டு பிரிவு சந்திக்கும் சாலை செல்லும் வழியில் ஆலயம் அமைந்துள்ளது.

Church location map:

https://maps.app.goo.gl/EMmQHmhnbvx4f4Hs7

வரலாறு:

அருள் வளம் மிகுந்த மதுரை மாநாகரில் சிந்தாமணி சாலையின் ஓரத்தில் அமைந்திருப்பதுதான் சூசையப்பர் புரம். அக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரால் ஆதரிக்கப்பட்ட பிற சமய குடும்பத்தினர் சிலர் பத்துத்தூண் பகுதியில் குடியமர்ந்து ஓடு அறுக்கும் தொழிலை செய்து வந்தனர். பின்னர் பழைய குயவர்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து, குடியமர்ந்த காலத்தில், அனுப்பானடி வாய்க்காலில் தங்கம் அலசும் தொழிலை சிலரும், ஓடு அறுக்கும் தொழிலை சிலரும் செய்து வந்தனர். புனித அந்தோணியார் குருசடி சிந்தாமணி சாலையில் எழுப்பப்பட்டு, பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சேசு சபை குருக்கள், தூய வளனார் லயன்ஸ் சபை சகோதரிகள், பள்ளிகள் நிறுவுவதற்காக வந்ததால், அங்கு தங்கி இருந்தவர்களுக்கு சூசையப்பர்புரம் பகுதியில் வசிப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தோணியார் சிற்றாலயம் கட்ட நிதியுதவி புரியுமாறு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில குடும்பங்கள் சமயநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பாட்டுப்பாடி பொருளாக (அரிசி, பருப்பு) பணமாக ஈகை செய்யுமாறு வேண்டி பெற்றுத் திரும்பியதாகவும், பெற்ற பொருட்கள் விற்கப்பட்டு, நிதி சேர்த்து சிற்றாலயம் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் கூரை வேய்ந்து இருந்தது. மூன்று ஆண்டுகளில் ஓடாக பதியப்பட்டது. அருட்பணி. அடைக்கலம், சே.ச (1961-1968) பணிக்காலத்தில் இடித்து புதிதாக கட்டப்பட்டது. திரு. ராபின் மொயின் எனும் கேரளாவைச் சார்ந்த நன்மனம் கொண்டவர், சிறிய கோயிலைக் கட்டினார். 1976-ல் திறப்பு விழா நடந்தது. அந்தோணியார் திருவிழா சிறப்பாக வெவ்வேறு வடிவில் நடத்தப்பட்டது. இன்றுவரை அந்த ஆலயத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து இயேசுசபை  குருக்களின் வழிகாட்டுதலுடன் திருவிழா இனிதே நடைபெறுகிறது.

தற்போது மாதத்தின் மூன்றாவது செவ்வாய், திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. புதுமைகள் நிறைந்த புனித அந்தோணியார் ஆலயம், அனைத்து சமயத்தினருக்கும் அருள் வழங்கும் ஆலயமாக இருந்து வருவது இதன் சிறப்பு.

தகவல்கள்: உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: பங்கு ஆலய உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.