1041 புனித அந்தோனியார் ஆலயம், கல்லாமொழி

  

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: பதுவைநகர், கல்லாமொழி

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: மணப்பாடு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், பதுவைநகர், குலசேகரன்பட்டினம்

2. புனித அன்னம்மாள் ஆலயம், மங்களபுரம் குலசேகரன்பட்டினம்

3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், அனுகூலபுரம் -குலசேகரன்பட்டினம்

பங்குத்தந்தை அருட்பணி. I. பென்சிகர், மறைவட்ட முதல்வர்

குடும்பங்கள்: 110

அன்பியங்கள்: 6

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

திருவிழா: ஜனவரி மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 26-ம் தேதி வரை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜெகதீஷ், தூத்துக்குடி மறைமாவட்டம்

2. அருட்சகோதரி. சவரியம்மாள்

வழித்தடம்: மணப்பாடு -கல்லாமொழி 7கி.மீ

தூத்துக்குடி -திருச்செந்தூர் -கல்லாமொழி 

Church Map location: St. Antony's Church

https://maps.app.goo.gl/6iPAKAKyJ5bN4yQo7

வரலாறு:

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் குடியேறி வாழ்ந்து வந்தனர். உடன்குடி பங்குத்தந்தையர்கள்  இம்மக்களின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்து வந்தனர். அருட்தந்தை. ஸ்டீபன் கோமஸ் அவர்கள் ‌உடன்குடி (1986-1987) பங்குத்தந்தையாக இருந்த போது, புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓலையால் ஆன தேவாலயத்தை அமைத்தார். 

அருட்தந்தை. அந்தோனி ஜெகதீசன் உடன்குடியின் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது (1993-1994) அவர் பதுவை நகரில் தேவாலயத்தை கட்டினார். இதனை ஆயர் மேதகு எஸ்.டி. அமலநாதர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்.  

மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 01.06.2002 அன்று பதுவை நகர் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்தந்தை. எம். ஜி. விக்டர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக  நியமிக்கப்பட்டார். அவரது முயற்சியால் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு, 2003 ஆம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, மக்கள் கல்லாமொழிக்கு மாற்றப்பட்டனர். இவர்களுக்கு காரித்தாஸ் இத்தாலினா அமைப்பினால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இவர்களின் ஆன்மீகத் தேவைக்காக கல்லாமொழியில் ஒரு புதிய  தேவாலயம் கட்டப்பட்டு, 22.07.2008 அன்று ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இது முதல் கல்லாமொழி ஆலயமானது பங்கு ஆலயமாக செயல்பட்டு வருகிறது.

பங்கின் கெபி & குருசடி:

தூய லூர்து மாதா கெபி

தூய மிக்கேல் அதிதூதர் குருசடி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

புனித தொன் போஸ்கோ வாலிபர் சபை

அமலோற்பவ மாதா இளம் பெண்கள் சபை

நற்கருணை வீரர் சபை

பாலர் சபை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. M.G. விக்டர் (2002-2006)

2. அருட்பணி. அலெக்சாண்டர் (2006-2008)

3. அருட்பணி. பெஞ்சமின் டிசூசா  (2008-2010)

4. அருட்பணி. ராயப்பன் (2010-2011)

5. அருட்பணி. டென்னிஸ் வாய்ஸ் (2011-2016)

6. அருட்பணி. ஜேம்ஸ் பீட்டர் (2016-2020)

7. அருட்பணி. ஜான் பென்சன் (2020-2022)

8. அருட்பணி. ஆரோக்கிய தாஸ் (2022-2022 Oct)

9. அருட்பணி. கிங்ஸ்லி (2022 Oct-2023)

10. அருட்பணி. பென்சிகர் (2023 -----

புதுமைகள் நிறைந்த கல்லாமொழி புனித அந்தோனியார் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்....

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. பென்சிகர் அவர்கள்.