புனித பாத்திமா அன்னை ஆலயம்
இடம்: கீரைத்துறை, மதுரை, 625009
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு; வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 45
அன்பியங்கள்: 2 (அர்ப்பணம், மாட்சிமை)
மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி
திருவிழா: மே மாதத்தில் ஒரு நாள்
வழித்தடம்:
திருத்தலப் பேராலயத்திருந்து மாகாளிப்பட்டி ரோடு வழியாக, கீரைத்துறை செல்லும் வழியில் ஆலயம் உள்ளது.
Church Map location:
https://maps.app.goo.gl/uQTkCUpFg37QZ6Qg7
வரலாறு:
மதுரை மாநகரில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடமாக கருதப்படுவது கீரைத்துறை பகுதியாகும். 1956ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களை விசுவாச வாழ்வில் நிலைநிறுத்தவும், பக்தியில் வளர்க்கவும், அன்றைய பங்குத்தந்தை மரிய மிக்கேல், SJ அவர்கள், சுமார் 15 சென்ட் நிலத்தை வாங்கி, அங்கு பாத்திமா அன்னை பெயரில் குருசடி அமைத்தார். இதில் திரு. சுவாமிநாதன் என்பவர் கோயில்பிள்ளையாக இருந்து செபமாலை, மாதா பிரார்த்தனை மற்றும் செபங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். 1969-ம் ஆண்டு அப்பகுதியில் குடியிருந்த கிறிஸ்தவ குடும்பங்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, குருசடி அகற்றப்பட்டு, கல்சுவரும், ஓட்டுக்கூரையும் கொண்ட சிற்றாலயம் கட்டப்பட்டது. மாதந்தோறும் திருப்பலியும், திருவிழா காலங்களில் நவநாட்களும் சிறப்பாக நடைபெறத் துவங்கின.
1990-ம் ஆண்டில் அருட்பணி. விக்டர், SJ பங்குத் தந்தையாக பணியாற்றிய போது ஆலய மணியும், திருச்சிலுவைப் பாதையும் ஆலயத்தில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சிற்றாலய கட்டிடம் சிதைவடைந்ததை தொடர்ந்து, கீரைத்துறை மக்களின் வேண்டுகோளை ஏற்று பங்குத்தந்தை P. S. அருள், SJ அவர்களது முன்முயற்சியாலும், மறைமாவட்டம், இயேசு சபை குழுமம் வழங்கிய நிதி உதவி மற்றும் பொது மக்களின் நன்கொடையை பயன்படுத்தி, தற்போது நாம் காணும் எழில்மிக்க ஆலயமாக புதுப்பிக்கப்பட்டு, 28.02.2013 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.
தகவல்கள்: திருத்தலப் பேராலய உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.


