புனித வனத்து அந்தோணியார் திருத்தலம்
இடம்: கொன்னைக்குடி
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: இலால்குடி
பங்குத்தந்தை அருட்பணி. A. வில்லியம்
தொடர்புக்கு: +91 96266 39044
தனிச்சிறப்பு:
பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்திலிருந்து 7 கி.மீ அருகில் இலால்குடி சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தவக்காலத்தில் திருப்பயணம் செய்து ஜெபிக்க அருமையான திருத்தலம். திருப்பயணிகள் தங்குவதற்கு சமுதாயக் கூடமும், கழிப்பறை வசதியும் உள்ளன. திருப்பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படும்.
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சவேரியார் ஆலயம், அன்பில் (140 குடும்பங்கள்)
2. புனித சந்தியாகப்பர் ஆலயம், வழுதியூர் (60 குடும்பங்கள்)
3. புனித சவேரியார் ஆலயம், சாத்தமங்கலம் (75 குடும்பங்கள்)
4. புனித சவேரியார் ஆலயம், ஆனந்தி மேடு (70 குடும்பங்கள்)
5. புனித செபஸ்தியார் ஆலயம், வழுதியூர் (36 குடும்பங்கள்)
பங்கில் குடும்பங்கள்: பங்கு 384 (கிளைப்பங்குகள் சேர்த்து 850)
அன்பியங்கள்: 11
1. புனித சந்தியாகப்பர் அன்பியம்
2. குழந்தை இயேசு அன்பியம்
3. புனித அன்னை தெரசா அன்பியம்
4. புனித சூசையப்பர் அன்பியம்
5. புனித மரியா அன்பியம்
6. புனித அன்னாள் அன்பியம்
7. புனித பதுவை அந்தோனியார் அன்பியம்
8. புனித வனத்து அந்தோணியார் அன்பியம்
9. புனித செபஸ்தியார் அன்பியம்
10. புனித சந்தன மாதா அன்பியம்
11. புனித அருளப்பர் அன்பியம்
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி & காலை 08:30 மணி
திங்கள், புதன், வெள்ளி & சனி திருப்பலி காலை 06:00 மணி
செவ்வாய் & வியாழன் திருப்பலி மாலை 06:30 மணி
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:00 மணிக்கு ஆலயத்தை சுற்றி தேர் பவனியுடன் செபமாலையும், அதனைத் தொடர்ந்து அந்தோணியார் சிறப்பு நவநாள் குணமளிக்கும் செப வழிபாட்டுடன் சிறப்பிக்கபட்டு, முடிவில் அனைவருக்கும் நெற்றியில் திருஎண்ணைய் பூசுதல் நடைபெறுகிறது.
மாதத்தின் முதல் சனி மாலை 06:30 மணிக்கு கெபியில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
பாதுகாவலர் விழா:
கொடியேற்றம்: ஜனவரி 13
தேர்பவனி: ஜனவரி 16
ஊரைச் சுற்றி நற்கருணை பவனி: ஜனவரி 17
ஆண்டு பெருவிழா:
கொடியேற்றம் மே-05
தேர்பவனி மே13 &14
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. அந்தோணிசாமி நாதர்
2. அருட்பணி. அந்தோணி சாலமோன்
3. அருட்பணி. M.S. லூர்துசாமி
4. அருட்பணி. சகாயசீலன், கொல்கத்தா மறைமாவட்டம்
5. அருட்பணி. அந்தோணி ஜஸ்டின், SDB
6. அருட்பணி. ஜோயல் நிர்மல் ராஜ்
7. அருட்பணி. அருண் பெல்லார்மின்
8. அருட்பணி. ஜோசப் மைக்கல் ராஜ்
9. அருட்பணி. வளன் அரசு
10. அருள்சகோதரி. வில்லியம்
11. அருள்சகோதரி. ஜாண் ஆஃப் தி கிராஸ், Carmel Ashram, Kumbakonam
12. அருட்சகோதரி. பிரிஜித் சீலி, SMMI
13. அருட்சகோதரி. R. ஜெயராக்கினி, SMMI
14. அருட்சகோதரி. கரோலின் தீபா, SMMI
Church Map location: St. Antony's Church
https://maps.app.goo.gl/ELHc1zFzamAxrvx78
வரலாறு:
அமைவிடம்:
திருச்சி மாவட்டத்தில் இலால்குடி தாலுக்காவில், கொள்ளிடத்தின் வடகரையிலும், கூழை ஆற்றின் தென்கரையிலும் அமைந்த வளமிக்க எழில்மிகு கிராமம் கொன்னைக்குடி. இலால்குடியிலிருந்து சுமார் 6 கி.மீ கிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது.
பங்கின் துவக்கம்:
வடுகர்பேட்டை பங்குதந்தை அருள்திரு ரோஜர் சுவாமிகள் 1848ஆம் ஆண்டு கிறிஸ்தவ மக்களுக்காக கோவில் நிலம் முழுவதும் ரூ.10 -க்கு வாங்கி, அதில் குடிசை ஆலயம் அமைத்து, கிறிஸ்தவ மக்களை விசுவாசத்தில் வளர முயற்சி எடுத்தார்.
புதுவை -கடலூர் பேராயர் மேதகு கொண்டலே அவர்கள், வடுகர்பேட்டையிலிருந்து பிரித்து, 1867 ஆம் ஆண்டு கொன்னைக்குடியை பங்காக உயர்த்தினார்.
அருட்பணி. சூசைமரிநாதர் (1886-1898) பணிக்காலத்தில் பழைய ஆலய சுவர் வளைவுகளை இடித்து, ஓடு வேய்ந்து புதுப்பித்தார்.
அருட்பணி. மரிய ஆரோக்கியம் சுவாமிகள் (1898-1901) தமிழில் புத்தகங்கள் பல எழுதியவர். கிறிஸ்து நாதர் அநுசாரம் என்னும் அரும் பெரும் நூலினை தமிழில் இயற்றினார்.
1899 ஆம் ஆண்டில் புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கும்பகோணம் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது, கொன்னைக்குடி பங்கு கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது.
அருட்பணி. பிரன் சுவாமிகள் (1901-1907) காலத்தில் பங்குத்தந்தை இல்லமும், பள்ளிக்கட்டிடமும், மதில் சுவரும் எழுப்பப்பட்டது.
அருட்பணி. P. ஞானாதிக்கம் சுவாமிகள் (1954-1958) பணிக்காலத்தில் ஊர்மக்கள் ஒத்துழைப்புடன், நடராஜ புரத்திலிருந்து நேராக ஆலயத்திற்கு, 1955-ல் ஒரு சாலையை நிறுவினார்.
அருட்பணி. மரிய மிக்கேல் அவர்கள் 1966ல் புதிய பங்குத் தந்தை இல்லத்தைக் கட்டினார். இவரின் பெருமுயற்சியால் கொன்னைக்குடிக்குத் தனி ஊராட்சி மன்றமும், அஞ்சல் அலுவலகமும் கொண்டு வரப்பட்டது.
எங்க சாமி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அருட்பணி. T. ஜோசப் அவர்கள் (1974-1984) பழைய ஆலயமானது பழுதடைந்து காணப்பட்டதால், புதிய ஆலயம் கட்ட முயற்சி எடுத்தார். கர்தினால் D.S. லூர்துசாமி 1977இல் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவு பெற்று 05.10.1984 அன்று குடந்தை ஆயர் மேதகு D. பவுல் அருள்சாமி ஆண்டகை அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. இவருடைய காலத்தில் ஊரின் முன்னேற்றத்திற்கு மேல் நிலைத் தொட்டியும், மக்கள் மன்றமும் நடுநிலைப்பள்ளி ஓட்டுக்கட்டிடமும், அன்னாள் கட்டிடத்தின் விரிவாக்கமும் செய்யப்பட்டன.
அருட்பணி. M. S. செல்வராஜ் அடிகளார் (1984-1992) காலத்தில் கொன்னைக்குடியில் மட்டுமல்லாது, கிளைக் கிராமங்களிலும் ஆலயங்கள் சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டன. பங்கின் பொருளாதார வளர்ச்சிக்காக, கிராமத்திலே முதன் முறையாக மின்சாரம் மூலமாக விவசாயத்துக்குத் தண்ணீர் இறைக்கும் பணியினை துரிதமாக கோவில் நிலங்களில் ஏற்படுத்தினார். குடந்தை ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் குருத்துவ வெள்ளிவிழா நினைவாக பல்நோக்கு சமூக மையம் எழுப்பினார். பங்குத் தந்தையின் இல்லத்தை விரிவுபடுத்தினார்.
அருட்பணி. S. செல்வராஜ் அடிகளார் (1992-1997) பணிக்காலத்தில் லசிம் (Lacim) என்ற நிறுவனத்தின் உதவியின் மூலம், இளம் பெண்களுக்குத் தையற் மற்றும தட்டச்சு பயிற்சிக் கூடங்களும் ஏற்படுத்தினார். புனித அந்தோணியார் திருவிழாவின் போது அந்தி சப்பரம் மூலம் பல தவறுகள் ஏற்பட்ட காரணத்தினால் அதனை மாற்றி, திவ்ய நற்கருணை சுற்றுப் பிரகாரத்தை மக்கள் ஒத்துழைப்போடு செயல்படுத்தினார். இவர்காலத்தில்தான் கோயில் முன்பாக உள்ள மணி மண்டபம் ஏற்படுத்தப்பட்டது.
அருட்பணி. மார்ட்டின் தே போரஸ் (1997-2003) மக்களுடைய ஆன்மீக சமுதாய விழிப்புணர்வுக்காகப் பெங்களூர் புனித இராயப்பர் குருத்துவக் கல்லூரியிலிருந்து 25-க்கும் மேற்பட்ட குருமாணவர்கள் வந்து 10 நாட்கள் கொன்னைக்குடியிலும், கிளைக் கிராமங்களிலும் பணிபுரிந்தார்கள்.
புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியானது உயர்நிலைப்பள்ளியாக 08.06.1998 அன்று உயர்த்தப்பட்டது.
அருட்பணி. S. அகஸ்டின் (2003-2004) பணிக்காலத்தில் பெரிய கோபுரம் அருகில், இரண்டு சிறிய கோபுரங்கள் அமைக்கப் பட்டது. லூர்து மாதா கெபியும், நற்கருணை ஆராதனை கூடமும் கட்டப்பட்டது.
அருட்பணி. A. அந்துவான்: இவரது காலத்தில் ஆலய வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அருட்பணி. I. மரியதாஸ் (2011-2016), அருட்பணி. A. ஜெயராஜ் (2016-2022) ஆகியோர் பணிக்காலத்தில் மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர்.
அருட்பணி. A. சுவக்கின் (2022-2024) காலத்தில் சமுதாய கூடத்தின் பயன்பாட்டிற்காக, துவக்கப்பள்ளி அருகில், சமையல் மற்றும் உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டது. மேலும் மக்களின் ஆன்மீக எழுச்சிக்கு பல்வேறு பக்தி முயற்சிகள், நற்செய்தி அறிவிப்பு கூட்டங்கள் நடத்தி பாடல் குழுவை உருவாக்கி, மக்களுக்கு பெரும் சேவை புரிந்தார்.
2024 -ம் ஆண்டு முதல் பங்குதந்தையாக பணிபுரிந்து வருகிற அருட்பணி A. வில்லியம்ஸ் அவர்கள், பொறுப்பேற்ற உடனே மக்களை ஒருங்கிணைத்து, ஆலய புனரமைப்புக் குழு அமைத்து, மக்களின் பெரும் பொருளாதார பங்களிப்பினாலும், காரியஸ்தர்கள், அன்பியங்கள் உடல் உழைப்பாலும், ஆலயம் முழுவதும் முற்றிலும் புனரமைக்கப்பட்டு, 17.08.2025 அன்று ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கபட்டது. மேலும் புதிய குடும்ப அட்டை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கபட்டது. ஆலயத்தை சுற்றி சிறிய தேர்பவனிக்கு பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டது. மாதத்தின் முதல் செவ்வாய் பாதுகாவலரின் சிறப்பு நவநாள் குணமளிக்கும் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. இறுதியில் பங்கெடுக்கும் பக்தர்கள் அனைவரின் நெற்றியிலும் திரு எண்ணைய் பூசுதல் நடைபெறுகிறது. நூற்றுக் கணக்கான மக்கள் தாங்களாகவே முன்வந்து உபயம் செய்து, வனத்து அந்தோணியாருக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள்.
பங்கில் செயல்படும் பக்த சபைகள்:
1)மரியாயின் சேனை
2)வின்சென்ட் தே பவுல் சபை
3)கத்தோலிக்க சங்கம்
4) பாலர் சபை
5)பீட சிறுவர் குழு
6)பாடகற்குழு
7) இளையோர் இயக்கம்
8)பாத யாத்திரை குழு
9)கல்விக் குழு
10)மாதா சபை
பங்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள்:
1)புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
2) புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி
புனித அன்னாள் சபை கன்னியர் இல்லம் உள்ளது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்திரு. லெகூயிர் (1862-1867)
2. அருட்திரு. அம்புரோஸ் (1867-1877)
3. அருட்திரு. மிஷேல் (1877-1879)
4. அருட்திரு. தோமாஸ் (1879-1886)
5. அருட்திரு. சூசை மரியநாதர் (1886-1898)
6. அருட்திரு. மரிய ஆரோக்கியம் (1898-1901)
7. அருட்திரு. பிரன் (1901-1907)
8. அருட்திரு. கபான் (1907-1910)
9. அருட்திரு. K. ரத்தினம் (1910-1923)
10. அருட்திரு. S. குழந்தைநாதன் (1923-1927)
11. அருட்திரு. T. A. ராஜமாணிக்கம் (1927-1929)
12. அருட்திரு. A. சேவியர் (1929-1931)
13. அருட்திரு. A. அந்தோணி ஜோசப் (1931-1932)
14. அருட்திரு. P. M. ராயலு (1932-1933)
15. அருட்திரு. A.S. லூர்துநாதர் (1933-1939)
16. அருட்திரு. A.P. அருள்சாமி (1939-1942)
17. அருட்திரு. இருதயம் பவுல் (1942-1944)
18. அருட்திரு. மரிய பிரான்சிஸ் (1944-1946)
19. அருட்திரு. M. சின்னசாமி (1946-1949)
20. அருட்திரு. T. ஆரோக்கிய சாமி (1949-1954)
21. அருட்திரு. ஞானாதிக்கம் (1954-1958)
22. அருட்திரு. ரோச் மாணிக்கம் (1958-1962)
23. அருட்திரு. D. மரிய மிக்கேல் (1962-1970)
24. அருட்திரு. R. சவரிமுத்து (1970-1974)
25. அருட்திரு. T. ஜோசப் (1974-1984)
26. அருட்திரு. M.S. செல்வராஜ் (1984-1992)
27. அருட்திரு. S. செல்வராஜ் (1992-1997)
28. அருட்திரு. A. மார்ட்டின் தே போரஸ் (1997-2003)
29. அருட்திரு. S. அகஸ்டின் (2003-2004)
30. அருட்திரு. P. சகாய ராஜ் (2004-2009)
31. அருட்திரு. A. அந்துவான் (2009-2011)
32. அருட்திரு. I. மரிய தாஸ் (2011-2016)
33. அருட்திரு. A. ஜெயராஜ் (2016-2022)
34. அருட்திரு. A. சுவக்கின் (2022-2024)
35. அருட்திரு. A. வில்லியம் (2024......
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. A. வில்லியம் அவர்கள்.





